அகத்தியர் ஞானம்
அகத்தியர் ஞானம் 16ஆம் நூற்றாண்டு நூல். இதன் நூலாசிரியர் அகத்தியர் 18 சித்தர்களில் ஒருவர். [1] [2] ஐந்து வகையான ஞானம் இதில் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் சில.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே
- தான் என்ற தானே தான் ஒன்றே தெய்வம்
- பண்ணான உன்னுயிர்தான் சிவமது ஆச்சு
- பாரப்பா சிவன் வீடு போகும்போது பாழத்த பிணம் கிடக்குது என்பார், உயிர் போச்சு என்பார், ஆரப்பா அறிந்தவர்கள் ஆரும் இல்லை
- மூச்சப்பா தெய்வம் என்றே அறியச் சொன்னார்
- நான் என்றும் நீ என்றும் சாதி என்றும், நாட்டினார் உலகத்தோர் பிழைக்கத் தானே
- உடலுயிரும் பூரணமும் ஆன்மா ஈசன்
- கூடப்பா துரியம் எனும் வாலை வீடு, கூறரிய நாதர் மகேசுவரியே என்பார், நாடப்பா அவள்தனையே பூசை பண்ணு நந்தி சொலும் சிங்காரம் தோன்றும் தோன்றும்.
மேற்கோள்
- ↑ சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005