அஃறிணை என்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும்.இஃது அல்+திணை என்று பிரிக்கப்படும்; உயர்திணை அல்லாதது எனப் பொருள்படும். தேவர், மாந்தர், நரகர் என்பவர்களைச் சுட்டும் பெயர்கள் உயர்திணையாக வகுக்கப்பட்டன.

தொல்காப்பிய நூற்பா

உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமென் சொல்லெ


விரவுப்பெயர்கள்

உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள், தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை விரவுப்பெயர்கள் என வழங்கப்படுகின்றன. இருபத்தாறு வகையான விரவுப்பெயர்களைக் காணலாம்.[1]


குறிப்புகள்

  1. பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை
"https://tamilar.wiki/index.php?title=அஃறிணை&oldid=16900" இருந்து மீள்விக்கப்பட்டது