ஹரிஷ் உத்தமன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹரிஷ் உத்தமன்
Harish-uthaman-still-3
பிறப்பு5 ஏப்ரல் 1982 (1982-04-05) (அகவை 42)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ஸ்ரீஹரி
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010 - தற்போது வரை
உயரம்6 அடி 1 அங்குலம் (183 செ.மீ)

ஹரிஷ் உத்தமன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்துள்ள நடிகராவார். இவர் பாண்டிய நாடு, கவுரவம், மீகாமன் போன்ற படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

நடிப்பு தொழில்

பாராமவுண்ட் ஏர்வேஸ் மற்றும் பிரித்தானிய ஏர்வேஸ் நிறுவனங்களில் தலா மூன்றாண்டுகள் பணியாற்றிய ஹரிஷ் உத்தமன் பின்னர் சூர்ய பிரபாகரன் இயக்கிய தா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதே படத்திற்காக நார்வே தமிழ் படவிழாவில் சிறந்த புதுமுக விருதைப் பெற்றார். பின்னர் ராதா மோகன் இயக்கத்தில் கௌரவம் படத்தில் நடித்தார்.

சூரிய பிரபாகரன் இவரை இயக்குனர் சுசீந்திரனிடம் சிபாரிசு செய்தார். சுசீந்திரன் இயக்கத்தில் வில்லனாக இவர் நடித்து வெளிவந்த பாண்டிய நாடு திரைப்படம் இவரது சினிமா வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஹரிஷ்_உத்தமன்&oldid=22234" இருந்து மீள்விக்கப்பட்டது