வம்சி பைடிபைலி
வம்சி | |
---|---|
தாய்மொழியில் பெயர் | వంశీ |
பிறப்பு | 25 சூலை 1979 தெலங்காணா, இந்தியா |
இருப்பிடம் | ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் |
வம்சி பைடிபைலி (வம்சி) (தெலுங்கு: వంశీ) (பிறப்பு 27 ஜூலை 1979) என்பவர் தெலுங்குத் திரைப்பட இயக்குனராவார். இவர் 2010 இல் பிருந்தாவனம் திரைப்படத்தினை இயக்கினார். அதன் மூலம் பிரலமானவாரக அறியப்படுகிறார்.[1]
யுவடு (2014) & தோழா (2016)[2] போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் சிறந்த திரைப்பட இயக்குனருக்கான பிலிம்பேர் விருதினை வென்றவர்.
இவர் இந்தியாவில் நிர்மல் மாவட்டம் தெலங்காணா என்ற இடத்தில் பிறந்தார். மென்பொருள் துறையில் பணியாற்றிய பின்பு 2002 இல் ஈஸ்வர், 2004 இல் வர்சம், மாஸ்,பத்ரா போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றினார்.
2007 இல் முன்னா என்ற திரைப்படத்தினை முதன்முதலாக இயக்கினார். 2010 இல் பிருந்தாவனம் என்ற திரைப்படத்தினை இயக்கினார். இப்படம் பெரும் புகழ் பெற்றுத்தந்தது. 2013 இல் யுவடு, 2016 இல் தோழா போன்ற படங்களை இயக்கினார்.
திரைப்படம்
இயக்குனர்
ஆண்டு | திரைப்படம் | மொழி | இசையமைப்பாளர் |
---|---|---|---|
2007 | முன்னா | தெலுங்கு | ஹாரிஸ் ஜயராஜ் |
2010 | பிருந்தாவனம் | தெலுங்கு | தமன் |
2014 | யுவடு | தெலுங்கு | தேவி ஸ்ரீ பிரசாத் |
2016 | தோழா | தெலுங்கு / தமிழ் | கோபி சுந்தர் |
2019 | மகரிஷி | தெலுங்கு | தேவி ஸ்ரீ பிரசாத் |
2023 | வாரிசு | தெலுங்கு / தமிழ் | தமன் |
ஆதாரங்கள்
- ↑ Y. S.C. (9 September 2012). "It’s a challenge". The Hindu இம் மூலத்தில் இருந்து 7 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150107140012/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/its-a-challenge/article3875715.ece. பார்த்த நாள்: 2015-01-14.
- ↑ Staff (26 October 2014). "Nagarjuna's multi-starrer to have one actress?". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/Nagarjunas-multi-starrer-to-have-one-actress/articleshow/44939217.cms. பார்த்த நாள்: 2015-01-14.