லாரா தத்தா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லாரா தத்தா
Lara Dutta.jpg
லாரா தத்தா பூபதி 2009இல்
பிறப்புலாரா தத்தா
16 ஏப்ரல் 1978 (1978-04-16) (அகவை 46)
காசியாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2001–இற்றை
உயரம்5 அடி 7 அங் (1.70 m)[1]
எடை58 kg (128 lb; 9.1 st)[1]
வாழ்க்கைத்
துணை
மகேஷ் பூபதி (2011–நடப்பு)

லாரா தத்தா பூபதி (Lara Dutta Bhupathi, இந்தி: दत्ता लारा भूपति; பிறப்பு: 16 ஏப்ரல் 1978) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை , ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதர் மற்றும் முன்னாள் பிரபஞ்ச அழகி ஆவார்.[2]

வாழ்க்கை வரலாறு

இளமை

லாரா இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்திலுள்ள காசியாபாத்தில் ஓர் பஞ்சாபி தந்தைக்கும் ஆங்கிலோ இந்தியத் தாய்க்கும் மகளாக ஏப்ரல் 16, 1978ஆம் ஆண்டு பிறந்தார்.[2] அவருடைய தந்தை வான்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எல்,கே.தத்தா மற்றும் தாய் ஜென்னிஃபர் ஆகும். இரு மூத்த சகோதரிகளில் ஒருவர் இந்திய வான்படையில் பணி புரிகிறார். லாராவிற்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு. 1981ஆம் ஆண்டு தத்தா குடும்பத்தினர் பெங்களூருவிற்கு மாறியதால் லாரா பள்ளிப் படிப்பை புனித பிரான்சிசு சேவியர் உயர்நிலைப்பள்ளியிலும் பிராங்க் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் படித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளியலில் மக்கள் தொடர்பியல் துணைப்பாடத்துடன் பட்டப்படிப்பை முடித்தார். 2000ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதனால் 2001ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதராக நியமிக்கப்பட்டார்.[3]

திரைப்பட பணிவாழ்க்கை

2002ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான அரசாட்சியில் நடிப்பதற்கு முதலில் கையெழுத்திட்டார்;இருப்பினும் பல நிதிப்பிரச்சினைகளால் அந்தத் திரைப்படம் 2004ஆம் ஆண்டில்தான் வெளியாயிற்று. அவரது இந்தித் திரைப்படம் அந்தாஸ் 2003ஆம் ஆண்டில் வெளியானது. நல்ல நிதி வசூலைப் பெற்றதுடன் இந்தப்படத்தின் மூலம் அவருக்கு பிலிம்ஃபேர் சிறந்த அறிமுக நடிகை விருதும் கிடைத்தது. இதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். வசூலில் குறிப்பிடத்தக்க படங்களாக மஸ்தி (2004), நோ என்ட்ரி (2005), பார்ட்னர் (2007) மற்றும் அவுஸ்ஃபுல் (2010) அமைந்தன.

தனிப்பட்ட வாழ்க்கை

லாரா நியூயார்க் நகரில் வாழ்ந்தபோது புகழ்பெற்ற அடிப்பந்தாட்ட வீரர் டெரிக் ஜேடருடன் பழகி வந்தார்.[4]

செப்டம்பர் 2010இல் இந்திய டென்னிசு ஆட்டக்காரர் மகேஷ் பூபதியடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.[5][6] பெப்ரவரி 16, 2011 அன்று இருவரும் மும்பையின் பாந்தராவில் திருமணப் பதிவாளர் முன்னிலையில் எளிய திருமணம் செய்து கொண்டனர்.[7] பின்னர் பெப்ரவரி 20, 2011 அன்று கோவாவின் சன்செட் பாயின்டில் கிறித்தவ முறையில் திருமண உறுதிமொழிகளை பகிர்ந்து கொண்டனர்.[8]

ஆகத்து 1, 2011 அன்று லாரா தனது முதல் மகவை கருவுற்றிருப்பதாக உறுதி செய்தார்.[9]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "LARA DUTTA - PROFILE". Indiatimes இம் மூலத்தில் இருந்து 15 நவம்பர் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111115182543/http://feminamissindia.indiatimes.com/photoshow/7883149.cms?curpg=1. பார்த்த நாள்: 30 July 2011. 
  2. 2.0 2.1 Shanadi, Govind (May 2000). "Lara Dutta - Miss Universe 2000". desiclub.com (New York) இம் மூலத்தில் இருந்து 2011-11-06 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/query?url=http://www.desiclub.com/community/culture/culture_article.cfm?id%3D17&date=2011-11-06. பார்த்த நாள்: 2010-09-20. 
  3. UNFPA Goodwill Ambassadors profile page, Available online பரணிடப்பட்டது 2003-04-20 at the வந்தவழி இயந்திரம்
  4. Chhabra, Aseem (4 July 2001). "Lara Dutta Plans to Shift to Manhattan". Rediff. http://www.rediff.com/us/2001/jul/04usspec.htm. பார்த்த நாள்: 2011-02-26. 
  5. "Lara Dutta and Mahesh Bhupathi to tie the knot". Bollywood. Bollywood (Mumbai, India). February 18, 2011. http://www.bollygraph.com/actress/lara-dutta-and-mahesh-bhupathi-to-tie-the-nod/3879/. பார்த்த நாள்: 2011-02-18. 
  6. Gupta, Chinki (September 19, 2010). "Lara Dutta super-excited about "new" character in Don-2". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (New Dehli, India) இம் மூலத்தில் இருந்து 2010-09-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100921202434/http://www.hindustantimes.com/Lara-Dutta-super-excited-about-new-character-in-Don-2/Article1-602083.aspx. பார்த்த நாள்: 2010-09-20. 
  7. "Lara Dutta Wedding Details" இம் மூலத்தில் இருந்து 2012-08-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120806230338/http://www.robotstxt.org/. பார்த்த நாள்: 2011-02-02. 
  8. TNN (20 February 2011). "Mahesh Bhupathi and Lara Dutta exchange wedding vows". Times of India. http://timesofindia.indiatimes.com/sports/off-the-field/Mahesh-Bhupathi-and-Lara-Dutta-ties-the-knot-in-Goa/articleshow/7530614.cms. பார்த்த நாள்: 2011-02-26. 
  9. TNN (1 August 2011). "Lara Dutta is pregnant!". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/bollywood/news-interviews/Lara-Dutta-is-pregnant/articleshow/9443021.cms. பார்த்த நாள்: 2011-08-01. 

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லாரா_தத்தா&oldid=23376" இருந்து மீள்விக்கப்பட்டது