ரா. கி. ரங்கராஜன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரா. கி. ரங்கராஜன்
ரா. கி. ரங்கராஜன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ரா. கி. ரங்கராஜன்
பிறப்புபெயர் கிருஷ்ணமாச்சாரி ரங்கராஜன்
பிறந்ததிகதி அக்டோபர், 5, 1927
இறப்பு ஆகஸ்ட் 18, 2012
அறியப்படுவது எழுத்தாளர், இதழாளர்

ரா. கி. ரங்கராஜன் (அக்டோபர், 5, 1927 - ஆகஸ்ட் 18, 2012) என்னும் ராயம்பேட்டை கிருஷ்ணமாச்சாரி ரங்கராஜன் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள், கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார்.

பிறப்பு

ரங்கராஜன் 5-10-1927-இல் கும்பகோணத்தில் ரெட்டியார்குள வடகரையில் 21ஆம் எண் வீட்டில் பிறந்தார். [1] இவர் தந்தை மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சமசுகிருதப் பண்டிதர். இவர் அண்ணன் ரா.கி.பார்த்தசாரதியும் (ஆர்.கே.பார்த்தசாரதி) சமசுகிருதப்பண்டிதரே. இவரது சொந்த ஊர் கும்பகோணத்தை அடுத்த ராயம்பேட்டை ஆகும்.[2]

இதழாளர்

ரங்கராஜன் தன் 16-ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-இல் பேராசிரியர் சீனிவாசராகவனின் பரிந்துரையால் சக்தி வை. கோவிந்தனின் காலபைரவன்[2] இதழில் உதவியாசிரியராக தனது எழுத்துலக வாழ்க்கையைத் தொடங்கினார். [1] பின்னர் பெ.தூரனின் காலச்சக்கரம்’ என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-இல் குமுதம் நிறுவனம் சிறிது காலம் நடத்திய ஜிங்லி என்ற சிறுவர் இதழில் சேர்ந்தார். அவ்விதழ் நின்ற பின்னர் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் இணைந்து 42ஆண்டுகள் பணியாற்றினார். அண்ணாநகர் டைம்ஸ் என்ற இதழில் கட்டுரைகள் எழுதினார்

புனைப்பெயர்

கிருஷ்ணகுமார் என்ற பெயரில் அமானுட கதைகளும் டி. துரைசாமி என்ற பெயரில் உண்மைக் குற்றங்களின் அடிப்படையில் குற்றக்கதைகளும் வினோத் என்ற பெயரில் தமிழ்த்திரைப்படச் செய்திக்கட்டுரைகளும் (லைட்ஸ் ஆன் வினோத்) எழுதினார். சூர்யா, ஹம்சா, மாலதி, முள்றி, அவிட்டம், மோகினி ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார்.

படைப்புகள்

இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும் , 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன.

திரைப்படங்களான படைப்புகள்

இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளிவந்தன. அவை:

  1. சுமைதாங்கி
  2. இது சத்தியம்
  3. ?

பல படைப்புகள் சின்னத் திரையிலும் இடம் பெற்றுள்ளன.

கமல்ஹாசனின் மகாநதி திரைப்படத்திற்கு உரையாடல் எழுதினார். [2] [3]

பயிற்றுநர்

இளம் எழுத்தாளர்களுக்குக் கதைஎழுதும் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் எப்படிக் கதை எழுதுவது? என்ற வகுப்பினையும் தான் ஒருவராகவே நடத்தி வந்தார்.[1]

ரா.கி.ர வின் படைப்புகள்

  1. அங்குமிங்குமெங்கும்
  2. அடிகளார் ஓர் உறவுப் பாலம்
  3. அடிமையின் காதல் (வரலாற்றுப்புதினம்)
  4. அட்வென்சர் ஹாஸ்ப நாடகங்கள்
  5. அபாய நோயாளி
  6. அழைப்பிதழ்
  7. அவன் (தன்வரலாறு)
  8. ஆவி ராஜ்ஜியம்
  9. இது சத்தியம்
  10. இருபத்திமூன்றாம் படி
  11. இன்னொருத்தி
  12. உலகம் இப்படித்தான்
  13. உள்ளேன் அம்மா
  14. ஊஞ்சல்
  15. எங்கிருந்து வருகுதுவோ?
  16. எடிட்டர் எஸ்.ஏ.பி. (புனிதன், ஜ.ர.சுந்தரேசன் ஆகியோருடன் இணைந்து எழுதியது)
  17. எப்படிக் கதை எழுதுவது?
  18. என்னைத்தவிர...
  19. ஒரே ஒரு வழி
  20. ஒரே வழி
  21. ஒரு தற்கொலை நடக்கப் போகிறது
  22. ஒரு தாய் ஒரு மகள்
  23. ஒளிவதற்கு இடமில்லை (1,2)
  24. கன்னா பின்னா கதைகள்
  25. காதல் கதைகள்
  26. குடும்பக் கதைகள்
  27. குழந்தைக்காக
  28. கேட்டதும் கிடைத்ததும்
  29. கையில்லாத பொம்மை
  30. கோஸ்ட்
  31. க்ரைம்
  32. சர்வாதிகாரி கவாகா
  33. சின்னக் கமலா
  34. சும்மா இருக்காதா பேனா?
  35. ட்விஸ்ட் கதைகள்
  36. தர்மங்கள் சிரிக்கின்றன
  37. திக்-திக் கதைகள்
  38. திறக்கக் கூடாத கதவு
  39. தூரன் என்ற களஞ்சியம்
  40. நகைச்சுவைத் தோரணங்கள்
  41. நாலு திசையிலும் சந்தோஷம்
  42. நாலு மூலை
  43. நான் ஏன்? (நக்கீரன் தொடர்)
  44. நான் கிருஷ்ண தேவராயன் - 1 (வரலாற்றுப்புதினம்)
  45. நான் கிருஷ்ண தேவராயன் - 2 வரலாற்றுப்புதினம்)
  46. நீங்களும் முதல்வராகலாம் (நக்கீரன் தொடர்)
  47. படகு வீடு
  48. பந்தயம் ஒரு விரல்
  49. பல்லக்கு
  50. புரொபசர் மித்ரா
  51. பெரிய எழுத்து கொ
  52. போதை ராஜ்யம் (நக்கீரன் தொடர்)
  53. மறுபடியும் தேவகி
  54. முதல் மொட்டு
  55. மூவிரண்டு ஏழு
  56. ராசி
  57. ராத்திரி வரும்
  58. வயது பதினெழு
  59. வாளின் முத்தம்
  60. விஜி (அட்வெஞ்சர் நாடகங்கள்)
  61. ஹவுஸ் ஃபுல்
  62. ஹாஸ்ய கதைகள்
  63. ஹேமா ஹேமா ஹேமா
  64. ஜெயித்துக்கொண்டே இருப்பேன்

மொழிபெயர்ப்புகள்

  1. ஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி
  2. இன்னொரு பட்டாம்பூச்சி (ஃபெலிக்ஸ் மிலானி எழுதிய கன்விக்ட்)
  3. கண்ணுக்குத் தெரியாதவன் காதலிக்கிறேன் (ஹாரி எஃப் செயிண்ட் எழுதிய மெமாய்ர்ஸ் ஆஃப் அன் இன்விஸிபிள் மேன்)
  4. காதல் மேல் ஆணை (டேனியல் ஸ்டீல்)
  5. எங்கே? எங்கே? எங்கே? (டேனியல் ஸ்டீல் நாவலின் மொழிபெயர்ப்பு) 1995 ஜூனியர் விகடனில் தொடர்)
  6. 11:29 (டேனியல் ஸ்டீல்) 1997 கல்கியில் வெளிவந்த தொடர்.
  7. பட்டாம்பூச்சி (ஹென்றி ஷாரியர் எழுதிய பாப்பிலான் புதினத்தின் மொழிபெயர்ப்பு)
  8. மரணம். . . கடவுள் சாய்ஸ்! (ஆர்தர் ஹெய்லி. மொழிபெயர்ப்பு) 1999 இல் ஜூனியர் விகடனில் வெளிவந்த தொடர்)
  9. மேடம் (ஜெஃப்ரி ஆர்ச்சரின் ஷால் வீ டெல் தி பிரஸிடென்ட் ) 1995 - ஜூனியர் விகடனில் தொடர்)
  10. தாரகை 1 (சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ்)
  11. தாரகை 2 (சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ்)
  12. லாரா (சிட்னி ஷெல்டனின் 'தி ஸ்டார்ஸ் ஷைன் டவுன்)
  13. ஜெனிஃபர் (சிட்னி ஷெல்டனின் ரேஜ் ஆஃப் ஏஞ்சல்ஸ்)
  14. டுவிஸ்ட் கதைகள் (ஜெஃபிரே ஆர்ச்சரின் எ டுவிஸ்ட் இன் தி டேல்
  15. காதல் மேல் ஆணை (டேனியேல் ஸ்டீலின் தே பிராமிஸ்)
  16. புரட்சித் துறவி (மேரி கோரெல்லியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன்)
  17. பேய் பெண் பாதிரி (வில்லியம் பீட்டர் பிளாட்டியின் தி எக்ஸார்ஸிஸ்ட்)

குடும்பம்

ரா.கி.ரங்கராஜன் கமலா என்பவரை மணந்தார். அவர்கள் இரண்டு ஆடவயும் மூன்று மகளிரையும் ஈன்றனர். [4]

ரா.கி.ர வைப் பற்றிப் பெரியோர்

மறைவு

ரா.கி.ரங்கராஜன் 2012 ஆகத்து 12ஆம் நாள் சென்னையில் மரணமடைந்தார். [2]

சான்றடைவு

  1. 1.0 1.1 ரங்கராஜன் ரா.கி., நாலுமூலை, சென்னை, கிழக்குப்பதிப்பகம், முதற்பதிப்பு, மார்ச் 2005
  2. 2.0 2.1 2.2 2.3 [http://tamilonline.com/thendral/article.aspx?aid=8105 தென்றல் 2012 செப்டம்பர்
  3. வரதராசன் பா, பட்டாம்பூச்சி பறந்துபோனதே!, குமுதம் 29.8.2012, பக்.137
  4. ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய "எங்கே போயிட்டார் ரா.கி.ர?", அண்ணாநகர் டைம்ஸ்

வெளிஇணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரா._கி._ரங்கராஜன்&oldid=5692" இருந்து மீள்விக்கப்பட்டது