ராம்ஜி
ராம்ஜி | |
---|---|
பிறப்பு | சூலை 31, 1961 தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா |
பணி | ஒளிப்பதிவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1997-தற்போது வரை |
ராம்ஜி (Ramji (பிறப்பு : சூலை 31, 1961)[1] என்பவர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் செல்வராகவன், அமீர், மோகன் ராஜா, மற்றும் சங்கீத் சிவன் ஆகிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழ் , இந்தி , மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்[1].
பிறப்பு
ராம்ஜி சூலை 31, 1961 இல்தஞ்சாவூரில் , தமிழ்நாடு பிறந்தார்.
தொழில் வாழ்க்கை
இவரின் கூற்றுப்படி ஒளிப்பதிவு என்பது அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு மொழி ஆகும் எனக் கூறியுள்ளார்.[1] மேலும் தனது பணியானது நான் என்ன நினைக்கிறேன் என்பதனை தைரியமாகக் கூறுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளது எனவும் கூறியுள்ளார்[1]. வாழ்க்கைக்கு தொடர்புடைய கதைகளையே தான் தெரிவு செய்வதில் திடமாக இருப்பதாகத் தெரிவித்தர். இந்தப் பணிக்கு இவர் வந்தது எதிர்பாரமல் நிகழ்ந்தது. இவரின் தொழில் வாழ்க்கையானது 1989 ஆம் ஆண்டில் என். கே. விஷ்வநாத்துடன் துவங்கியது. ஒரு நாள் தனது நண்பர் ஒருவரின் அறிவுறுத்தலின் படி பி. சி. ஸ்ரீராமை சந்தித்தார். பின் 1989 ஆம் ஆண்டு வரை அவரிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தார். இவரிடம் பணி புரிந்த காலங்கள் இவரின் திறமையை வளர்த்துக் கொள்ளவும், சில நுனுக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் உதவின.[2] மேலும் கோபுர வாசலிலே, மீரா அமரன், தேவர் மகன், திருடா திருடா ஆகிய திரைப்படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். ஜீவா, கே. வி. ஆனந்த், திரு, பாலமுருகன், முத்துக்குமார், எம் எஸ் ஆகிய ஒளிப்பதிவாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[1]
1996 ஆம் ஆண்டில் ஒளிப்பதிவு இயக்குநர் ஆக வேண்டும் எனத் தீர்மானித்தார். இவரின் முதல் திரைப்படம் வள்ளல் ஆகும்.[1] இதில் சத்யராஜ், மீனா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். மணிவண்ணன், கவுண்டமணி, மனோரமா ஆகியோர் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். இதனை ராஜ்கபூர் இயக்கினார். ராம்ஜி இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தான் ஒரு படங்களில் ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொள்வார். அந்தத் திரைப்படங்கள் அவரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக இருந்தால் மட்டுமே ஒளிப்பதிவு செய்வார்.[1]
தமிழ்த் திரைப்படங்கள்
1997
1997 ஆம் ஆண்டில் வள்ளல் எனும் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.[1] இந்தத் திரைப்படத்தை ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதில் சத்யராஜ், மீனா (நடிகை) ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். மணிவண்ணன், கவுண்டமணி, மனோரமா (நடிகை) ஆகியோர் துணைக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். இதனை ராஜ்கபூர் இயக்கினார். தேவா (இசையமைப்பாளர்) இசையமைத்தார்.
2001
2001 ஆம் ஆண்டில் டும் டும் டும் திரைப்படத்தில் பணி புரிந்தார். இதனை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்தது. அழகம்பெருமாள் இயக்கினார். மாதவன், ஜோதிகா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர். கார்த்திக் ராஜா இசையமைத்தார்.[3]
2002
டிசம்பர் 13, 2002 இல் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தில் பணிபுரிந்தார். இதனை அறிமுக இயக்க்குநர்) அமீர் இயக்கினார். சூர்யா (நடிகர்), திரிசா ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
2005
2005 ஆம் ஆண்டில் ராம் திரைப்படத்தில் பணியாற்றினார். இதனை அமீர் இயக்கினார். ஜீவா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Tamil Cinematographer Cinematographer Ramji | Nettv4u", nettv4u (in English), retrieved 2018-04-28
- ↑ "Ramji (cinematographer)", veethi.com, retrieved 2018-04-28
- ↑ http://www.rediff.com/entertai/2002/jan/11mad.htm