ரன் (2020 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரன்
இயக்கம்இலட்சுமிகாந்த் சென்னா
தயாரிப்புஒய். ராஜீவ் ரெட்டி
சாய் பாபா ஜாகர்லமுடி
கதைசஹானா தத்தா
கார்த்திக் - அர்ஜுன் (உரையாடல்கள்)
இசைநரேஷ் குமரன்
நடிப்புநவ்தீப்
பூஜிதா பொன்னடா
ஒளிப்பதிவுசஜீஷ் ராஜேன்திரன்
படத்தொகுப்புஇராமகிருஷ்ணா அர்ரம்
கலையகம்பர்ட்ஸ் பிரேம் என்டெயின்மென்ட்ஸ்
விநியோகம்ஆஹா
வெளியீடுமே 29, 2020 (2020-05-29)
ஓட்டம்87நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு

ரன் (Run) என்பது 2020இல் இலட்சுமிகாந்த் சென்னா இயக்கத்தில் வெளியான தெலுங்கு உளவியல் பரபரப்பூட்டும் திகில்த் திரைப்படமாகும். இப்படத்தில் நவ்தீப், பூஜிதா பொன்னடா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்திருந்தனர். ஒய். ராஜீவ் ரெட்டியும், சாய் பாபா ஜாகர்லமுடியும் இணைந்து தயாரித்திருந்த இந்த படம் 29 மே 2020 அன்று ஆஹா என்ற மேலதிக ஊடக சேவை தளத்தில் வெளியிடப்பட்டது.[1] மேலதிக ஊடக சேவையில் "அம்ருதராமம்" என்ற திரைப்படம் ஒரு மாதத்திற்கு முன்பே திரையிடப்பட்ட போதிலும் இந்த படம் முதல் தெலுங்கு ஓடிடி வெளியீடு என்று கூறப்படுகிறது.[2]

கதை

சுருதியும் சந்தீப்பும் கணவன் மனைவியாவர். அவர்கள் தங்கள் திருமண ஆண்டுவிழாவை உணவுடன் கொண்டாட ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் சுருதி எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார். சந்தீப் அவளது மர்மமான மரணத்தில் சந்தேகம் கொண்டு அதைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.

நடிப்பு

  • சந்தீப் ரெட்டியாக நவ்தீப்
  • சுருதியாக பூஜிதா பொன்னடா
  • கலீலாக அமித் திவாரி
  • ரோசியாக பானு சிறீ மகேரா
  • சங்கர் ரெட்டியாக முக்தார் கான்
  • கற்பனை மருத்துவராக கௌசல்யா
  • உண்மையான மருத்துவராக ஷாபி
  • ஹரி சந்திரன் பாபாயாக (மாமா)
  • ராகுலாக கீரித்தி
  • வெங்கட் பரத்தாக
  • சாய் ஹர்ஷா ஒரு காவல் அதிகாரியாக

அக்டோபர் மற்றும் நவம்பர் 2019 க்கு இடையில் 24 நாட்களுக்கு முதன்மை புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றது.[1]

வெளியீடு

படம் 29 மே 2020 அன்று ஓடிடி தளமான ஆஹாவில் நேரடியாக வெளியிடப்பட்டது.[2]

தி ஹிந்துவின் விமர்சகர் சங்கீதா தேவி தண்டூ, இந்த படத்தை "ஒரு மந்தமான உளவியல் பரபரப்பூட்டும் படம்" என்று எழுதினார். நவ்தீப்பின் நடிப்பைப் பாராட்டும் போது, திரைக்கதை கணிக்கக்கூடியதாக இருக்கிறது என்றும் மேலும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தண்டூ கூறினார்.[3] தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த படத்திற்கு ஐந்தில் ஒன்றரை நட்சத்திரங்களைக் கொடுத்தது. மேலும் அதன் பொருத்தமற்ற திரைக்கதை மற்றும் மோசமாக எழுதப்பட்ட திரைக்கதைக்காக படத்தை கடுமையாக விமர்சித்தது.[4] பிரத்யுஷ் பராசாராமன் பிலிம் கம்மாபானியன் என்பதில் எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரன்_(2020_திரைப்படம்)&oldid=38299" இருந்து மீள்விக்கப்பட்டது