ரங் தே பசந்தி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ரங் தே பசந்தி
இயக்கம்ராகேஷ் ஓம்பிரகாஷ் மேரா
தயாரிப்புராகேஷ் ஓம்பிரகாஷ் மேரா,
தேவன் கோட்,
ரோனி ஸ்க்ரூவாலா
கதைரென்ஷில் டி சில்வா,
ராகேஷ் ஓம்பிரகாஷ் மேரா
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புஅமீர் கான்,
சோகா அலி கான்,
ஷர்மான் ஜோஷி,
மாதவன்,
சித்தார்த்,
குனால் கபூர்,
அதுல் குல்கர்னி,
கிரொன் ஹெர்,
அலைஸ் பாட்டன் ,
மோகன் அகஷெ,
வஹீதா ரஹ்மான்,
ஓம் பூரி,
அனுபம் கேர்,
சைரஸ் சௌகர்
விநியோகம்UTV Motion Pictures
வெளியீடுஜனவரி 26, 2006
மொழிஇந்துஸ்தானி
ஆக்கச்செலவுஇந்திய ரூபா 300 கோடி

ரங் தே பசந்தி (இந்துஸ்தானி: रंग दे बसंती, رنگ دے بسنتى) திரைப்படம் ஜனவரி 26,2006 ஆம் ஆண்டு வெளிவந்த பாலிவுட் திரைப்படமாகும்.கோல்டன் குலோப் விருதிற்காக ஜூலை 6,2006 ஆம் ஆண்டும் மற்றும் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுகளுக்காகவும் பரிந்துரைக்கப்பட்டது இத்திரைப்படம் மேலும் இந்திய ரூபா 345.5 கோடி வரையிலான வசூல் சாதனையை இத்திரைப்படம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண்மணியொருவர் தனது பாட்டனார் டைரியில் குறிப்பிட்டிருந்தது போன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி விபரணப்படம் எடுப்பதற்காக இந்தியாவிற்கு வருகை தருகின்றார்.அங்கு இவரின் தோழியாகப் பழகும் சோனியா (சோகா அலி கான்) மூலம் இவரின் திரைப்படத்தில் நடிப்பதற்குத் தேவையான கதாபாத்திரங்களாக டல்ஜீத் (அமீர் கான்) கரன் சிங்கனியா (சித்தார்த்),அஸ்லாம் (குனால் கபூர்),மற்றும் சுகி (ஷர்மான் ஜோஷி) போன்றவர்களை அறிந்துகொள்கின்றார்.ஆரம்பத்தில் இதனை மறுக்கும் அவர்கள் பின்னர் நடிப்பதற்கு ஒப்பும் கொள்கின்றனர்.இவர்களைத் தொடர்ந்து அரசியல்வாதியாக விளங்கும் லக்ஸ்மன் பாண்டே (அதுல் குல்கர்னி)யும் சேர்ந்து கொள்கின்றார்.இவ்விபரணப் படத்தின் மூலம் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று உண்மைகளை அறியும் இவர்கள் இந்தியாவிற்கு உதவி புரிவதில் தீவிரம் அடைகின்றனர்.இதனைத் தொடர்ந்து சோனியாவின் கணவரான விமான ஓட்டுநரான அஜெய் (மாதவன்) விபத்தில் இறந்து விட்டதாகச் செய்திகள் வந்தன.இச்செய்தி பின்னர் அரசியல்வாதிகளின் பொய்யான கூற்றென்பதனை அறியும் இவரின் நண்பர்கள் அமைதி முறையில் போராடுகின்றனர்.இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் இந்திய அரசியல்வாதிகளை வன்முறை மூலம் அணுக ஆரம்பிக்கின்றனர்.வன்முறையில் ஈடுபட்டனரா மேலும் இதன் பின்னர் என்ன நடந்தது என்பது கதையின் முடிவாகும்.

வெளியிணைப்புகள்