முஜிபுர் ரகுமான் (இலங்கை அரசியல்வாதி)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முஜிபுர் ரகுமான்
Mujibur Rahman
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதிகொழும்பு மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2015
மேல் மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
மார்ச் 2014 – ஆகத்து 2015
தொகுதிகொழும்பு மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
முகமது முஜிபுர் ரஹ்மான்

ஏப்ரல் 17, 1968 (1968-04-17) (அகவை 56)
கொழும்பு, இலங்கை
குடியுரிமைஇலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய மக்கள் சக்தி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய தேசியக் கட்சி
வாழிடம்(s)கொலன்னாவை வீதி, கொலன்னாவை
முன்னாள் கல்லூரிசாகிரா கல்லூரி, கொழும்பு

முகமது முஜிபுர் ரகுமான் (Mohamed Mujibur Rahman, பிறப்பு: 17 ஏப்ரல் 1968) இலங்கை முசுலிம் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

முஜிபுர் இரகுமான் 1968 ஏப்ரல் 17 இல் பிறந்தார்.[1] கொழும்பு, சாகிரா கல்லூரியில் கல்வி கற்றார்.

அரசியலில்

முஜிபுர் ரகுமான் 2014 மேல் மாகாணசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மேல் மாகாணசபை உறுப்பினரானார். பின்னர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[2][3][4] 2020 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.

2020 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[5][6]

தேர்தல் வரலாறு

முஜிபுர் ரகுமானின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2014 மாகாணசபை கொழும்பு மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசிய முன்னணி தெரிவு
2015 நாடாளுமன்றம் கொழும்பு மாவட்டம் ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய தேசிய முன்னணி தெரிவு
2020 நாடாளுமன்றம் கொழும்பு மாவட்டம் ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய மக்கள் சக்தி தெரிவு

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Directory of Members: Hon. Mujibur Rahuman, M.P.". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3213. பார்த்த நாள்: 18 September 2020. 
  2. "Ranil tops with over 500,000 votes in Colombo". The Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 7 September 2020. 
  3. "Many Vacancies Arise as Over Fifty Provincial Councillors Including Three Chief Ministers Enter Parliament as MP’s.". August 23, 2015 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 24, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150824141308/http://dbsjeyaraj.com/dbsj/archives/42812. பார்த்த நாள்: September 11, 2015. 
  4. "General Election 2020: Preferential votes of Colombo District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200918130218/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-colombo-district-1. பார்த்த நாள்: 18 September 2020.