மிஸ் கமலா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மிஸ் கமலா
இயக்கம்டி. பி. ராஜலட்சுமி
கதைடி. பி. ராஜலட்சுமி
நடிப்புடி. பி. ராஜலட்சுமி
வெளியீடு1936
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மிஸ் கமலா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. ராஜலட்சுமி முக்கிய பாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்தின் கதையை அவரே எழுதி இயக்கினார்.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சியில் டி. என். ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசிக்கிறார். தோடி ராகத்தில் ராகம், தானம், பல்லவியும், நன்னு விடிச்சி என்ற கீர்த்தனையை ரிட்டிகவுலா ராகத்திலும் வாசித்திருக்கிறார்[1].

உப தகவல்

1930 களின் பிரபல நாடக நடிகையும், முதல் பேசும் (காளிதாஸ்) பட நாயகியுமான டி. பி. ராஜலட்சுமி, 5 ஆண்டுகளில் தானே கதை வசனம் எழுதி நடித்து தயாரித்து இயக்கிய படமாகும். மேலும், டி. பி. ராஜலட்சுமி முதல் பெண் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பெயரும் இவருக்கு உண்டு.[2]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மிஸ்_கமலா&oldid=32780" இருந்து மீள்விக்கப்பட்டது