மாயா மச்சீந்திரா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாயா மச்சீந்திரா
இயக்கம்ராஜா சந்திரசேகர்
தயாரிப்புபி. எல். கமேகா
மெட்ரோபோலிடன் பிக்சர்ஸ்
நடிப்புஎம். கே. ராதா
எம். ஜி. ஆர்
எம். ஜி. சக்கரபாணி
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
என். எஸ். கிருஷ்ணன்
சாரதா
எம். ஆர். ராதாபாய்
டி. ஏ. மதுரம்
வெளியீடுஏப்ரல் 22, 1939
ஓட்டம்.
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மாயா மச்சீந்திரா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எம். ஜி. ஆர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இலட்சுமண தாஸ் எழுதிய இப்படத்தின், முதன்மைப் பாத்திரத்தில் எம். கே. ராதா நடித்தார். இந்தத் திரைப்படம் 1939 இல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.[1]

கதை

துறவியான மச்சீந்த்ரா (எம். கே. இராதா) தன் சீடன் சங்கநாத்துடன் (என். எஸ். கிருஷ்ணன்) ஊர்மிளாதேவி (எம். ஆர். ராதாபாய்) ஆளும் நாட்டுக்குச் செல்கிறார். அரசியின் ஆட்சி எல்லைக்குள் இருக்கும் நாட்டுக்குள் நுழைந்ததால் கைது செய்யப்படுகின்றனர். தண்டணையாக மச்சீந்த்ரா கழுத்தில் ஒரு வட்டக்கல்லை மாட்டுகின்றனர். விசாரணையின்போது அரசிக்கும் மஞ்சீந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. ஒரு கட்டத்தில் கோபமுற்ற அரசி மச்சீந்திரனை நோக்கி வாளை ஓங்குகிறாள். உடனே மச்சீந்திரன் ஜெய் அலக் நிரஞ்சன் என்ற மந்திரத்தைக் கூறியவுடன் வாள் பூவாக மாறுகிறது. மச்சீந்திரனின் கழுத்தில் உள்ள வட்டக்கல் வெடித்துச் சிதறுகிறது. பின்னர் மச்சீந்த்ரனின் சடாமுடி நீங்கி அழகனாக காட்சியளிக்கிறார்.

இந்த நிகழ்வுகளினால் அதிர்ச்சிக்கு உள்ளாகும் அரசி மச்சீந்த்ரனிடம் தன்னை மணந்துகொள்ளுமாறு வேண்டுகிறாள். அதற்கு மச்சீந்திரா மறுக்கிறார். இதற்கிடையில் தன் அண்ணனின் மரணத்திற்கு பழிவாங்க படையெடுத்து வருகிறார் சூரியகேது (எம்.ஜி.ஆர்). அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை

நடிகர்கள்

நடிகர் கதாபாத்திரம்
எம். கே. ராதா மச்சிந்திரன்
எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி கோரகர்
எம். ஆர். ராதாபாய் ஊர்மிளாதேவி
எம். ஜி. ராம்சந்தர் சூர்யகேது
சாரதா வெங்கடாச்சலம் மௌனிநாத்
என். எஸ். கிருஷ்ணன் சங்கநாத்
டி. ஏ. மதுரம்
எம். எஸ். சரோஜா

தயாரிப்பு

எம்.ஜி.ஆரின் சுயசரிதையான ‘நான் நான் பிறந்தேன்’ நூலில் எத். ஜி.ஆர் குறிப்பிட்டபடி, முதலில் இப்படத்தில் சூரியகேது பாத்திரத்திற்கு முதலில் ஒப்பந்தமானவர் நடராஜ பிள்ளை. மேலும் எம்.ஜி.ஆருக்கு சூரிய கேதுவின் சகோதரரான விசாலட்ச மகாராஜா என்ற சிறிய பாத்திரம் வழங்கப்பட்டது. இந்த சிறிய பாத்திரம் ஒரே காட்சியில்தான் வரும். ஆனால், கல்கத்தாவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே உடல் நலம் பாதிக்கபட்டிருந்த எம். ஜி. நடராஜப்பிள்ளை இறந்துவிட்டார். இதன் பிறகு அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த சூரிய கேது பாத்திரம் எம்ஜிஆருக்கு வழங்கப்பட்டது. படத்தில் எம்.ஜி.ஆர்.இன் பெயர் எம். ஜி. ராம்சந்தர் என்று குறிப்பிடப்பட்டது.

மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் தராரித்த இப்படத்திற்கு பாபநாசம் சிவன் இசையமைத்திருந்தார். பாடல்களை சி. ஏ. லட்சுமணதாஸ் எழுதினார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மாயா_மச்சீந்திரா&oldid=36517" இருந்து மீள்விக்கப்பட்டது