மஞ்சரிப்பா
Jump to navigation
Jump to search
மஞ்சரிப்பா [1] என்னும் நூல் கிருஷ்ணதேவராயரைப் புழ்ந்து பாடும் நூல். கிருஷ்ணதேவராயர் 1509-1529 ஆண்டுகளில் நாடாண்ட மன்னர். எனவே இந்த நூலின் காலம் 16 ஆம் நூற்றாண்டு. இந்த நூல் அகத்துறைப் பொருள்களும், புறத்துறைச் செய்திகளும் விரவி வந்த ஒரு நூல். இந்த நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரியவில்லை.
மஞ்சரி என்னும் சொல் ஒரு காம்பில் கொத்தாகத் தோன்றும் பூக்களைக் குறிக்கும். குறிப்பாக மகரந்தப் பொடிகள் தாங்கிய பல காம்புத் தொகுதியைக் குறிக்கும். மாலை நூல்கள் பாவினக் கலவை நோக்கில் பெயர் பெற்றவை. மஞ்சரி நூல் நூல்கள் பொருள்-கலவை நோக்கில் பெயர் பெற்றவை.
அடிக்குறிப்பு
- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 281.