பார்வதி (பாடலாசிரியர்)
Jump to navigation
Jump to search
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கவிஞர் பார்வதி |
---|---|
பிறப்புபெயர் | பார்வதி |
பிறந்ததிகதி | மே 7 |
பிறந்தஇடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | கவிஞர், பாடலாசிரியர் |
தேசியம் | இந்தியன் |
கல்வி | எம்.ஏ., எம்.பில்., |
பார்வதி (Parvathy) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆவார்.[1][2] நவீன நாடகப் பரிச்சயம் உள்ளவர். பரீக்ஷா நவீன நாடகக் குழுவில் நடிகையாக இருந்துள்ளார். பொதிகைத் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல்துறை ஆளுமைகளின் நேர்காணல்களை நேர்த்தியாகச் செய்துள்ளார். தற்போது திரைப்படங்களுக்கு தொடர்ந்து பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார்.
கவிதை
- 'இப்படிக்கு நானும் நட்பும்
- 'இது வேறு மழை'
- 'அந்த மூன்று நாட்கள்' என்ற நூல்கள் இதுநாள் வரையில் வெளியாகியுள்ளன.[3] 'அந்த மூன்று நாட்கள்' என்ற தொகுப்பு மாதவிடாய் குறித்த கவிதைகள் அடங்கிய தொகுப்பாகும்.[4]
எழுதிய திரைப்பாடல்கள்
ஆண்டு | திரைப்படம் | பாடல்கள் | விருதுகள் |
---|---|---|---|
2014 | ஜில்லா | வெரசா போகையில | தென்னிந்திய மிர்ச்சி இசை விருதுகள்: வளர்ந்து வரும் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் பரிந்துரைக்கப்பட்டது. |
வல்லினம் | நகுலா நகுலா | ||
திருமணம் எனும் நிக்காஹ் | கண்ணுக்குள் பொத்தி வைப்பேன், யாரோ இவள் |
தென்னிந்திய மிர்ச்சி இசை விருதுகள்: வளர்ந்து வரும் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் பாடல் பரிந்துரைக்கப்பட்டது. | |
அமரகாவியம் | ஏதேதோ எண்ணம் வந்து | தென்னிந்திய மிர்ச்சி இசை விருதுகள்: வளர்ந்து வரும் சிறந்த பாடலாசிரியர் வரிசையில் பரிந்துரைக்கப்பட்டது. | |
2016 | களம் | புது புது | |
2017 | அதே கண்கள் | போன போக்கில் | |
2018 | அடங்காதே | தரையில் நடக்கும் | |
2019 | பரீஸ் பரீஸ் | ஒதுக்க நெனச்சா, இதுவா என் பூமி |
|
2020 | சீறு | செவ்வந்தியே, வாசனப் பூச்செண்டா |
திரைக் கலைஞராக
ஆண்டு | ஆவணத் திரைப்படம் | வேடம் | தயாரிப்பு | |
---|---|---|---|---|
2013 | வெத நெல்லு | முதன்மை கதாபாத்திரம் | DHAN அறக்கட்டளை |
மேற்கோள்கள்
- ↑ சுஜிதா சென், தொகுப்பாசிரியர் (9 ஜூலை 2018). கண்டாங்கி..', `வெரசா..' எது விஜய்க்குப் பிடிக்கும் தெரியுமா?" - பாடலாசிரியர் பார்வதி. விகடன் இதழ். https://cinema.vikatan.com/tamil-cinema/130225-interview-with-lyricist-parvathy.
- ↑ மகராசன் மோகன், தொகுப்பாசிரியர் (10பிப்ரவரி 2017). அந்த வகைப் பாடலுக்கே ஆயுள் அதிகம்! - பாடலாசிரியர் பார்வதி நேர்காணல். தி ஹிந்து தமிழ் நாளிதழ். https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/195521-.html.
- ↑ பாட்டுத் தமிழ் இது புது மழை!. குங்குமம் இதழ். 13 ஜனவரி 2014. http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=1104&id1=84&issue=20140113.
- ↑ பார்வதி, தொகுப்பாசிரியர் (2021). அந்த மூன்று நாட்கள். தமிழ் அலை.