நாலடியார் பழைய உரைகள்
Jump to navigation
Jump to search
பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை.[1]
நாலடியார் நூலுக்குப் பழைய உரைகள் பல உள்ளன. நாலடியார் பாடல்களுக்குப் பழமையான உரைகள் எனக் கொள்ளத்தக்க வகையில் நாலடியார் உரைவளம் என்னும் நூல் வெளிவந்துள்ளது. தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு பதுமனார், தருமர், ஆகியோர் உரைகளும், பெயர் தெரியாத ஒருவரின் உரையும் அதில் உள்ளன. இவற்றில் பதுமனார் உரை காலத்தால் முந்தியதாகக் காணப்படுகிறது.
- பதுமனார் உரை
- தருமர் உரை
- நாலடியார் விளக்கவுரை
- நாலடியார் மதிவரர் உரை
- தஞ்சை சரஸ்வதி மஹாலில் உள்ள வெளியிடப்படாத உரை
- மு. அருணாசலம் பாதுகாப்பில் இரண்டு ஏட்டுப் பிரதிகளில் உள்ள உரை ஒன்று.
இந்த உரைநூல்களின் காலம் 13ஆம் நூற்றாண்டு.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑ டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
__DISAMBIG__
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
__DISAMBIG__