தொகைநூல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பலரால் பாடப்பட்ட பாடல்களோ, நூல்களோ ஒரே தலைப்புப் பெயரின் கீழ் தொகுக்கப்பட்டுப் தரப்படும்போது அவை தொகைநூல்கள் எனப்படுகின்றன. இத் தொடரில் தொகை என்னும் சொல் 'கூட்டுத்தொகை', 'பெருக்குத்தொகை' என்பனவற்றில் கொள்ளப்படும் பொருள் பாங்கினது. இரண்டு சொற்கள் ஒரு சொல்லாகத் தொகுக்கப்பட்டிருக்கும் தொடரை வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உம்மைத்தொகை, உவமைத்தொகை, அன்மொழித்தொகை என்றெல்லாம் தொகைநிலைத் தொடராகக் குறிப்பிடுவது போன்றது இவ் வழக்கு. தொல்காப்பியம் தொகைச்சொல் [1], தொகைநிலை [2], தொகைமொழி [3], தொகைமொழிநிலை [4] என்னும் தொடர்களால் இதனைக் குறிப்பிடுகிறது. தொகை என்னும் சொல் திருக்குறளிலும் இப் பொருளில் கையாளப்பட்டுள்ளது. [5]

தமிழ் தொகைநூல்கள்

மேற்கோள்கள்

  1. தொல்காப்பியம் 2-285
  2. தொல்காப்பியம் 3-69-12
  3. தொல்காப்பியம் 1-224
  4. தொல்காப்பியம் 2-412-4
  5. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை (திருக்குறள் 1043)
"https://tamilar.wiki/index.php?title=தொகைநூல்&oldid=19823" இருந்து மீள்விக்கப்பட்டது