துமிலன் செல்வகுமாரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
துமிலன் செல்வகுமாரன்
துமிலன் செல்வகுமாரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
துமிலன்
பிறந்ததிகதி (1982-02-21)பெப்ரவரி 21, 1982
பிறந்தஇடம் புலோலிமேற்கு, ஆத்தியடி. பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
கல்வி Volontariat (Journalism)

Fachinformatiker im Bereich “Systemintegrator for Infranet”,

Erasmus-Widmann-Gymnasium, Schwäbisch Hall, Germany
அறியப்படுவது பத்திரிகையாளர், புகைப்படப்பிடிப்பாளர், எழுத்தாளர்
இணையதளம் http://thumi.com/

துமிலன் செல்வகுமாரன் (பிறப்பு: பெப்ரவரி 21, 1982) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெர்மனியப் பத்திரிகையாளரும், புகைப்படப்பிடிப்பாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் தற்சமயம் ஜெர்மனியில் வசித்து வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

துமிலன் இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள மேலைப்புலோலியூர், பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மே, 1986 இல் இருந்து ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் கணினித்துறை சம்பந்தமாகக் கற்றிருந்தாலும், பத்திரிகைத்துறை மீது உள்ள ஆர்வத்தால் மீண்டும் பத்திரிகைத்துறை சம்பந்தமான மேற்படிப்பை மேற்கொண்டு ஜனவரி 2006 இல் இருந்து Schwäbisch Hall இல் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் Haller Tagblatt என்ற ஜெர்மனியப் பத்திரிகையின் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். இவரது ஆக்கங்களும், புகைப்படங்களும் ஜெர்மனியில் இருந்து வெளிவரும் பல பத்திரிகைகளிலும், இணையத்தளங்கிலும் இடம் பெற்றுள்ளன.

கூ-குளுக்ஸ்-கிளான்

இவர் 2012 இல், யேர்மனியில் இயங்கும் கூ-குளுக்ஸ்-கிளான் (Ku-Klux-Klan) என்ற அமைப்புடன் தொடர்புடைய இரகசிய முகவர்களை அணுகி, அவர்களுடன் தொடர்பு கொண்டு சில இரகசியத்தகவல்களைச் சேகரித்து, பத்திரிகையில் எழுதத் தொடங்கியதால் நியோநாசி என்று அழைக்கப்படும் தேசிய சோசலிய திரைமறைவு அமைப்புக்கும் (Nationalsozialistischer Untergrund (NSU)) கூ-குளுக்ஸ்-கிளான் என்ற அமைப்புக்குமான தொடர்புகளும், மறைந்திருந்த பல தகவல்களும் பொலிஸ்துறைக்குத் தெரியவந்தன.[1] இது விடயமான பல இரகசியத்தகவல்களுடனான Geheimsache NSU என்ற நூலை இவரும் இன்னும் ஒன்பது யேர்மனிய எழுத்தாளர்களும் இணைந்து எழுதியுள்ளார்கள். இந்நூல் மே 26, 2014 இல் வெளிவந்துள்ளது.[2]

யேர்மனிய எழுத்தாளர்களுடன் இணைந்து இவர் எழுதிய நூல்கள்

  • Schreddern, Spitzeln, Staatsversagen: Wie rechter Terror, Behördenkumpanei und Rassismus aus der Mitte zusammengehe[3] 31.03.2013
  • Geheimsache NSU: Zehn Morde, von Aufklärung keine Spur [2] - 26.05.2014

புகைப்படங்களுடன் வெளிவந்த நூல்கள்

புகைப்படங்களுடன் வெளிவந்த இதழ்கள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-31. பார்க்கப்பட்ட நாள் 2014-05-29.
  2. 2.0 2.1 http://www.amazon.de/Geheimsache-NSU-Morde-Aufkl%C3%A4rung-keine/dp/3863510860/ref=sr_1_1?ie=UTF8&qid=1401400920&sr=8-1&keywords=geheimsache+nsu
  3. http://www.amazon.de/Schreddern-Spitzeln-Staatsversagen-Beh%C3%B6rdenkumpanei-zusammengehen/dp/3899655508/ref=sr_1_1?ie=UTF8&qid=1401402364&sr=8-1&keywords=Schreddern%2C+Spitzeln%2C+Staatsversagen
"https://tamilar.wiki/index.php?title=துமிலன்_செல்வகுமாரன்&oldid=26327" இருந்து மீள்விக்கப்பட்டது