திருவாரூர்க் கோவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

திருவாரூர்க் கோவை [1] என்னும் நூல் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது.

இது 16-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. சைவ எல்லப்ப நாவலர் ஆறு புராண நூல்களும், எட்டு சிற்றிலக்கிய நூல்களும் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய சிற்றிலக்கியங்களில் ஒன்று இந்தக் கோவை நூல்

மற்று இடம் கொண்ட புய பூதரன் எல்லன் மாநிலத்தில்
கற்று இடம் கொண்ட புலவோர்கள் யாரும் களிக்க உமை
உற்று இடம் கொண்ட தென் ஆரூர்த் தியாகருக்கு உம்பர் தொழும்
புற்று இடம் கொண்டவருக்கு அருள் கோவை புகன்றனனே

இவர் அகப்பொருள் பாடல்களில் பத்திச் சுவையைப் புகுத்தித் தம் திறமைகளையெல்லாம் காட்டி இந்த நூலை உருவாக்கியுள்ளார்.
இவர் திருவண்ணாமலைப் புராணம், திருவண்ணாமலை அந்தாதி என்னும் நூல்களையும் பாடியவர்.
அந்த நினைவில் இவர் திருவாரூர்ச் சிவனையும் ‘அண்ணாமலை உறை ஆரூர்த் தியாகர்’ எனக் குறிப்பிடுகிறார்.
சைவ சித்தாந்தக் கருத்துக்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இவர் முருகப்பெருமானின் பத்தர். [2]

இந்த நூல் 515 பாடல்களைக் கொண்டது. [3]

நற்றாய் [4] தமருக்கு [5] அறிவித்தல் என்பது நச்சினார்க்கினியர் குறிப்பிடும் அகத்துறைகளில் ஒன்று.
அதற்கு இலக்கியமாக இவரது நூலில் ஒரு பாடல் உள்ளது.

திருக்கோவையார் நூலில் அகத்துறைப் பாடல்களுக்கு இலக்கணம் காட்டும் ‘கொளு’ப் பாடல்கள் உள்ளன.
அதுபோல இந்த நூலிலும் 18 கொளுப்பாடல்கள் உள்ளன.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
  2. பாடல் 361, 386
  3. காப்பு வெண்பா 1, அவையடக்கப்பாடல் 2, நூல் 510, சிறப்புப் பாயிரப் பாடல் 2
  4. மகளைப் பெற்ற தாய்
  5. தன்னைச் சார்ந்தவர்களுக்கு
"https://tamilar.wiki/index.php?title=திருவாரூர்க்_கோவை&oldid=16746" இருந்து மீள்விக்கப்பட்டது