தாயின் நல்ல பெருமாள்
Jump to navigation
Jump to search
தாயின் நல்ல பெருமாள் என்பவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவர். இவரது பெயரைக் கல்வெட்டு 'புவனேக வீரத் தொண்டைமானான தாயின் நல்ல பெருமாள் முனையதரையன்' எனக் குறிப்பிடுகிறது.[1] இவர் ஆதித்த வல்லையன் என்னும் படைத்தலைவன் மீது பாடிய ஆறு பாடல்கள் ஆவணப் பாடல்களாகக் கல்வெட்டில் உள்ளன.[2][3]
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
அடிக்குறிப்பு
- ↑ தாயினும் நல்ல பெருமாள் என்னும் பெயர் சேலம் மாவட்டம் ஆறகளூர் கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமான் பெயர்.
- ↑ சிதம்பரம் கோயில் தெற்குக் கோபுரத்துக்கு எதிரே உள்ள நந்தி மண்டபத்தில் இந்தக் கல்வெட்டு உள்ளது.
- ↑ மாறவர்மன் விக்கிரம பாண்டியன் புவனேக வீரன் என்னும் பட்டம் எய்தி அரசேறிய 1248-ஆம் ஆண்டு இது செதுக்கப்பட்டது.