தவராசா கலையரசன்
தவராசா கலையரசன் நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஆகத்து 2020 | |
தொகுதி | தேசியப் பட்டியல் |
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 2012–2017 | |
தொகுதி | அம்பாறை மாவட்டம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | தவராசா கலையரசன் 16 ஏப்ரல் 1970 |
அரசியல் கட்சி | இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
தவராசா கலையரசன் (Thavarasa Kalaiarasan, பிறப்பு: 16 ஏப்ரல் 1970) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
கலையரசன் 1970 ஏப்ரல் 16 பிறந்தார்.[1] இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2] இவர் நாவிதன்வெளி பிரதேச சபையின் தலைவராகவும், கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தவர்.[2][3]
கலையரசன் 2012 மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.[4] பின்னர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு, கூட்டமைப்பு வேட்பாளர்களில் இரண்டாவதாக வந்தும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[5][6][7] இவர் மீண்டும் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். இம்முறை கூட்டமைப்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட எவரும் தெரிவு செய்யப்படவில்லை.[8][9] ஆனாலும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தமிழர் பிரதிநிதித்துவம் எதுவும் கிடைக்காததால், இவர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டார்.[10][11][12]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2012 மாகாணசபை[13] | அம்பாறை மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு | |||
2015 நாடாளுமன்றம்[6] | அம்பாறை மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவாகவில்லை | |||
2020 நாடாளுமன்றம் | அம்பாறை மாவட்டம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவாகவில்லை (தேசியப் பட்டியல் மூலம் தெரிவு) |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Directory of Members: Thavaraja Kalai Arasan". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3443. பார்த்த நாள்: 8 September 2020.
- ↑ 2.0 2.1 D. B. S. Jeyaraj (22 August 2020). "Future course of defeated ITAK leader “Maavai” Senathirajah". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/Future-course-of-defeated-ITAK-leader-Maavai-Senathirajah/172-194345. பார்த்த நாள்: 8 September 2020.
- ↑ "Meet your new parliamentarians". Sunday Times (Colombo, Sri Lanka). 23 August 2020. http://www.sundaytimes.lk/200823/news/meet-your-new-parliamentarians-2-413457.html. பார்த்த நாள்: 7 September 2020.
- ↑ "Preferential votes". Daily News (Colombo, Sri Lanka). 10 September 2012. http://archives.dailynews.lk/2012/09/10/pol08.asp. பார்த்த நாள்: 8 September 2020.
- ↑
- ↑ 6.0 6.1 "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 8 September 2020.
- ↑ "Preferential Votes". Daily News (Colombo, Sri Lanka). 19 August 2015 இம் மூலத்தில் இருந்து 20 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑
- ↑ "General Election 2020: Preferential votes of Digamadulla District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201001070529/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-digamadulla-district. பார்த்த நாள்: 8 September 2020.
- ↑
- ↑ "National List members of SLPP, AITC, ITAK gazetted". Ceylon Today (Colombo, Sri Lanka). 11 August 2020 இம் மூலத்தில் இருந்து 13 ஜூன் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210613151647/https://ceylontoday.lk/news/national-list-members-of-aitc-itak-gazetted. பார்த்த நாள்: 8 September 2020.
- ↑ "SLPP, ITAK & ACTC National List MPs announced via Extraordinary Gazette". நியூஸ் பெர்ஸ்ட் (Colombo, Sri Lanka). 10 August 2020. https://www.newsfirst.lk/2020/08/10/slpp-itak-actc-national-list-mps-announced-via-extraordinary-gazette/. பார்த்த நாள்: 8 September 2020.
- ↑ "Ampara preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 10 இம் மூலத்தில் இருந்து 29 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140429080352/http://www.slelections.gov.lk/pdf/ele_2012/Candidates/Ampara%20preference.pdf.