சுப்பிரமணியம் சிவபாலன்
எஸ். சிவபாலன் | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for திருகோணமலை | |
பதவியில் 1947–1952 | |
பின்னவர் | என். ஆர். இராசவரோதயம், இலங்கைத் தமிழரசுக் கட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
துணைவர் | பகவதி சோமசுந்தரம் |
பிள்ளைகள் | சிவராஜன், சுந்தரராஜன், சிறீஸ்கந்தராஜா, வரதராஜன், கணேசன், விமலாதேவி |
முன்னாள் கல்லூரி | உவெசுலியன் மிசன் ஆங்கிலப் பாடசாலை யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி உவெசுலி கல்லூரி, கொழும்பு |
இனம் | இலங்கைத் தமிழர் |
சுப்பிரமணியம் சிவபாலன் (Subramaniam Sivapalan, இறப்பு: 1960) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்வு
சிவபாலன் 1980 வாக்கில் திருகோணமலை மாவட்ட நீதிமன்ற செயலாளராகப் பணியாற்றிய எம். சுப்பிரமணியம் எனபவருக்குப் பிறந்தவர். திருகோணமலை உவெசுலியன் மிசன் ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி, கொழும்பு உவெசுலி கல்லூரி ஆகியவற்றில் உயர் கல்வியையும் கற்றார். பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அரசு எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார்.
1935 இல் கொட்டுக்குளம் பற்று பிரிவின் தலைமைக் கிராம அலுவலராகவும், பின்னர் தம்பலகாமம் பிரிவின் தலைமைக் கிராம அலுவலராகவும் நியமனம் பெற்றார்.
அரசியல் வாழ்வு
சிவபாலன் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 1952 தேர்தலில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் என். ஆர். இராசவரோதயத்திடம் தோற்றார்.[2]
மேற்கோள்கள்
- Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 201. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ 1947%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1947". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/Results 1947%20GENERAL%20ELECTION.PDF.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 1952%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1952". இலங்கைத் தேர்தல் திணைக்களம். http://www.slelections.gov.lk/pdf/Results 1952%20GENERAL%20ELECTION.PDF.[தொடர்பிழந்த இணைப்பு]
- 1960 இறப்புகள்
- திருகோணமலை மாவட்ட நபர்கள்
- இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை இந்துக்கள்
- இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி பழைய மாணவர்கள்
- கொழும்பு உவெசுலி கல்லூரி பழைய மாணவர்கள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்