சிறீதேவிகா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிறீதேவிகா
பிறப்புசிறீதேவி பணிக்கர்
6 மே 1984 (1984-05-06) (அகவை 40)
கேரளம், பாலக்காடு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2004-தற்போது வரை

சிறீதேவிகா (Sridevika) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரைப்படங்களில் தோன்றியுள்ளார். [1]

ஆரம்ப நாட்களில்

சிறீதேவிகா கேரளத்தின் பாலக்காட்டில் பிறந்தாவர். இவர் 2010 மார்ச்சில் விமானியான ரோஹித் ராமச்சந்திரனை மணந்தார்.

இவர் தமிழ் திரைப்படங்களில் ஜெய் ஆகாசுக்கு ஜோடியாக அகத்தியனின் ராமகிருஷ்ணா (2004) படத்தின் வழியாக நுழைந்தார்.அதைத் தொடர்ந்து அந்த நாள் ஞாபகம் (2005) படத்தில் நடித்தார். பின்னர் ராஜபாபு போன்ற தெலுங்கு படங்களிலும், மலையாள படங்களான அவன் சாண்டியுடே மகன் (2007), பார்த்தன் கண்ட பரலோகம் (2008), "மஞ்சாடிகுரு" (2012) போன்ற படங்களிலும், சுதீப் ஜோடியாக மை ஆட்டோகிராப் (2006) உள்ளிட்ட கன்னட படங்களிலும் தோன்றினார். தற்போது அவர் ரேண்டம் வெகரம் என்ற மலையாள வலைத் தொடரை இயக்குகிறார்.

திரைப்படவியல்

படங்கள்
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2004 கேரள ஹவுஸ் உடன் விற்பனைக்கு தமயந்தி மலையாளம்
2004 ராமகிருஷ்ணா பூஞ்சோலை தமிழ்
2005 அந்த நாள் ஞாபகம் தமிழ்
2005 அன்பே வா பிரியா தமிழ்
2006 ராஜபாபு தெலுங்கு
2006 மை ஆட்டோகிராப் லாதிகா கன்னடம்
2006 நீலகண்டா கங்கா கன்னடம்
2007 சாந்தா கன்னடம்
2007 க்ஷான க்ஷானா கன்னடம்
2007 அவன் சாண்டியுடே மகன் ஷோபா மலையாளம்
2008 பார்த்தன் கண்ட பரலோகம் சத்தியபாமா மலையாளம்
2008 செம்படா மீனாட்சி மலையாளம்
2009 ஞாபகங்கள் மீரா தமிழ்
2009 மாயமாலிகா மலையாளம்
2012 மஞ்சாடிகுரு லதா மலையாளம்
2017 ரேண்டம் வெகரம் இயக்குனர் மலையாளம்
2018 ஓரு குப்ரசிதா பயன் அனுராதா ஸ்ரீதர் மலையாளம்

குறிப்புகள்

 

"https://tamilar.wiki/index.php?title=சிறீதேவிகா&oldid=22770" இருந்து மீள்விக்கப்பட்டது