சிறிலேகா பார்த்தசாரதி
சிறிலேகா பார்த்தசாரதி | |
---|---|
பிறப்பு | தில்லி, இந்தியா |
பணி | பாடகர் |
வாழ்க்கைத் துணை | எம். ஜே. சிறீராம் |
சிறீலேகா பார்த்தசாரதி (Srilekha Parthasarathy) ஒரு தமிழ்ப் பாடகர் ஆவார். இவர் பொதுவாக சிறீலேகா என்ற முதல் பெயரால் குறிப்பிடப்படுகிறார். 2000 ஆம் ஆண்டில் நடிகை ஜோதிகா தோன்றிய "இதயம் எண்ணெய்" விளம்பரத்திற்கான சிறுபாடலைப் பதிவுசெய்து, இவர் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இப்பாடல் தமிழ் இசைத் துறையில் தனது நுழைவுச்சீட்டு என விவரிக்கிறார்.
ஆரம்ப கால வாழ்க்கை
சிறீலேகா ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து தில்லியில் வளர்ந்தார். புதுதில்லியின் டி.டி.இ.ஏ மூத்தோர் மேல்நிலைப் பள்ளியிலியிருந்து தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பிறப்பால் தென்னிந்தியரான இவர் வட இந்திய மற்றும் தென்னிந்திய மொழிகளையும் இசையையும், மேற்கத்திய இசையையும் கற்றுக்கொண்டார். தனது நான்காவது வயதில், புதுதில்லியில் ஆண்டுதோறும் நடைபெறும் அகில இந்திய குழந்தைகள் இசை போட்டியில் முதல் பரிசு வென்றார்.
தொழில்
லேசா லேசா என்றத் திரைப்படத்தின் "ஏதோ ஒன்று" என்ற பாடலுக்காக இசை இயக்குனர் ஹாரிஸ் ஜயராஜுடன் இவரது அறிமுகம் இருந்தது. "ஜங்ஷன்" என்றத் திரைப்படத்திற்கான "பூ முகம் சிரிச்சா", "பாப் கார்ன்" படத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியத்துடன் "காதலாகி", விசில் படத்தில் "டோன்ட் வொரி பி ஹாப்பி", சேனா படத்திற்காக"சுத்தி சுத்தி வருவான்" உள்ளிட்ட பல பாடல்களை இவர் பாடியுள்ளார். [1]
பின்னர், இவர் சாமி திரைப்படத்தில் "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு" என்ற பாடலை பாடினார். தென்னவன் படத்தில் "வினோதனே" என்ற பாடலை பாடினார். பின்னர், குறும்பு படத்தில் இடம்பெற்ற "வா மசக்காற்றே", திருடா திருடி படத்தில் "ஆயுர்வேத அழகி" போன்ற பல பாடல்கள் இவரது திரையிசை வாழ்க்கையில் இருந்தது.
இவரது சமீபத்திய பதிவுகளில் "திம்சு கட்டை" (திருமலை), "சின்னா வீடா", "கொக்கு மீனத் திங்குமா" (கோவில்) "பச்சக்கிளி பச்சக்கிளி" ஆகியவை அடங்கும். இவரது பிற பாடல்களில் "மம்மி செல்லமா" (ஜோர்), "பம்பர கன்னு" (மதுர), "வெச்சுக்க வெச்சுக்க வா", "கருடா கருடா", மற்றும் "தவிலு தவிலு" ஆகியவையும் அடங்கும்.
இவர், விஜய் தொலைக்காட்சியின் தர்மயுத்தம் என்றத்தொலைக்காட்சித் தொடரில் தோன்றினார். இவர் பாடகர் எம்.ஜே. சிறீராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். [2]
விருதுகள்
- எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் இடம்பெற்ற "வெச்சிக்க வெச்சிகாவா" பாடலுக்கான சிறந்த பெண் பின்னணி பாடகர்
- கோயம்புத்தூரிலுள்ள தாமோதரன் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி வழங்கிய "யூத் ஐகான்" (2004)
- சங்கம் கலாக் குழுவால் வழங்கப்பட்ட இளம் சாதனையாளர் விருது (2004)
- டி.வி.கே கலாச்சார அகாதாமியின் சிறந்த இளம் பின்னணி பாடகர் விருது. (2004)
நேரடி நிகழ்ச்சிகள்
இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, குவைத், கொழும்பு உள்ளிட்ட பிற நாடுகளில் 200க்கும் மேற்பட்ட நேரடி நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார். யுயேண்டே, ஏர்செல், டச்டெல், ஏர்டெல், சாம்சங், பிபிஎல் மொபைல், டிவிஎஸ் குழுமம், காக்னிசன்ட் தொழினுட்பத் தீர்வகம், அஜூபா தொழில்நுட்ப தீர்வகம் போன்ற நிறுவனங்களுக்கான நேரடி நிகழ்ச்சிகளை இவர் வழங்கியுள்ளார். விஜய் தொலைக்கட்சியின் "ஏர்டெல் சூப்பர் சிங்கர்" தொடரில் இவர் ஒரு நநடுவராக இருக்கிறார்.
இரசிகர் மன்றம்
இவருக்கு, அமெரிக்காவின் ஓரிகனின் போர்ட்லன்ட்டில் "நோ ஒன் நோட்டிஸிடு சிறீலேகா" என்ற முதல் இரசிகர் மன்றம் உள்ளது. இது, ஓரிகனில் தமிழ்ப் பாடகருக்காக அமைக்கப்பட்ட முதல் இரசிகர் மன்றமாகும். மேலும், இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ "A voice of her own". The Hindu. http://www.thehindu.com/arts/music/a-voice-of-her-own/article3807264.ece.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "My wife is my best critic: Shriram". Times of India இம் மூலத்தில் இருந்து 2013-09-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130925131635/http://articles.timesofindia.indiatimes.com/2010-09-25/news-and-interviews/28218458_1_musical-night-carnatic-music-enthusiasts.
வெளி இணைப்புகள்
- "Srilekha Parthasarathy". http://www.imdb.com/name/nm1996671/.
- Raaga.com. "Tamil Songs from Raaga.com - tamil music, videos and latest movies" (in en). https://www.raaga.com/tamil.
- "Metro Plus Tiruchirapalli : Prefers music to cinema". 2009-03-06 இம் மூலத்தில் இருந்து 2009-03-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090306130000/http://www.hinduonnet.com/thehindu/mp/2006/10/07/stories/2006100700400100.htm.
- "Music Plug" இம் மூலத்தில் இருந்து 2006-05-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060529214338/http://www.musicplug.in/singers_songlist.php?artistid=506.
- "Srilekha Parthasarathy" இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303195201/http://srilekhap.tripod.com/profile.html.
- "Thiraipaadal". http://ww1.thiraipaadal.com/.