சித்தர் கோலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சித்தர்களின் கோலம் உலகியலிலிருந்து சற்றே மாறுபட்டது.[1] சித்தர்கள் உலகியலைத் துறந்தவர்கள். அவர்களது பாடல்களும் உலகியலைக் கடந்தனவாக இருந்தன. ஓடே கலன். உண்பது ஊரிடு பிச்சை எனப் பெரும்பாலோர் வாழ்ந்தனர். அவர்கள் அணிந்திருந்த உடைகளும் மாறுபட்டிருந்தன. சட்டைமுனி் [2] என்னும் சித்தர் சட்டை அணிந்துகொண்டே இருந்தார். அதனால் இவரைச் சட்டைமுனி என்றும், சட்டமுனி என்றும் வழங்கினர். கம்பளிச்சட்டைமுனி எனவும் இவரைக் குறிப்பிட்டனர். பட்டினத்தார் [3] துறவு பூண்ட பின்னர் கோவணம் மட்டுமே உடுத்திக்கொண்டிருந்தார். சிற்றம்பல நாடிகளும், அவரது மாணாக்கர்களும் [3] பழுதையைக் [4][5] கட்டிக்கொண்டே வாழ்ந்தனர். வள்ளலார் [6] தலையில் எப்போதும் முக்காடு போட்டுக்கொண்டே வாழ்ந்தார்.

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 71. 
  2. 16 ஆம் நூற்றாண்டு
  3. 3.0 3.1 14 ஆம் நூற்றாண்டு
  4. பழுதான கிழிந்த துணிகள்
  5. வைக்கோல் புரியாலான பழுதைக் கயிற்றைக் காலில் கட்டிக்கொண்டே வாழ்ந்தார் எனவும் கூறுவர்
  6. 19 ஆம் நூற்றாண்டு
"https://tamilar.wiki/index.php?title=சித்தர்_கோலம்&oldid=27967" இருந்து மீள்விக்கப்பட்டது