சரவணப் பெருமாளையர்
Jump to navigation
Jump to search
சரவணப்பெருமாளையர் 19 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டில் திருத்தணிகையில் சங்கமகுலமென்னும் வீரசைவ மரபில் தோன்றி, வடமொழியிலும், தென்மொழியிலும் பெரும்புலமை பெற்றுப் பல நூல்களை இயற்றிச் சென்னை மாகாணக் கல்லூரியின் முதல் தமிழ் ஆசிரியராக இருந்தவர்.
பிறப்பு
கல்லாரகரி வீர சைவமடத்ததிபர் வழிவந்தவருமான கந்தப்பையர் அவர்களின் இளையகுமாரர் ஆவார். இவர் உடன்பிறந்தவர் விசாகப்பெருமாளையர் இவர்களிருவரும் கந்தப்பையருகதகு இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்கள். வீரசைவ மரபிரனராதலால், விசாகன், சரவணன் என்னும் சைவப்பெயர்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தம் தந்தையாரிடத்திலே கல்வி பயின்றதோடு, இலக்கணக்கடல் இராமானுச கவிராயரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றனர்.
பணிகள்
- நாலடியார், நன்னூல், நைடதம் (கைக்கிளைப் படலம் வரை எழுதினார். இதன் உரை முற்றுப்பெறவில்லை.பின்னர் இவரது மகன் எழுதினார்), திருவள்ளுவ மாலை, வெங்கைக் கோவை முதலிய நூல்களுக்கு உரை எழுதினார்.
- ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை, மூதுரை, நன்னெறி முதலிய சிறுநூல்களுக்கும் உரை எழுதினார்.
- திருக்குறள் தெளிபொருள் விளக்கவுரையும் செய்துள்ளார்.
- பூகோள தீபிகை, இயற்றமிழ்ச்சுருக்கம், அணியியல் விளக்கம், குளத்தூர்ப் புராணம் முதலிய நூல்களை இயற்றினார்.
- பிரபுலிங்க லீலையின் முதல் மூன்று கதிக்கு((மாயை உற்பத்தி வரை) ) உரை எழுதினார். ஒவ்வொரு செய்யுள் முடிவிலும் மெய்ப்பாடு, பயன்கூறுவதும் குவலயானந்தத்திலுள்ள அணிகளை எடுத்தாளுவதும் இவரது தனிஇயல்பு.
- கி.பி. 1830 ஆம் ஆண்டு திருக்குறள் பரிமேலழகர் உரையை அச்சிட்டார். திருவாசகம், திருவிளையாடல், நாலடியார் இவற்றை அச்சிட்டதாகவும் தெரிகிறது.
- திருவள்ளுவமாலை உரை மிக்க திட்பநுட்பம் வாய்ந்தது. இது சிறந்த ஆராய்ச்சியுரையாக உள்ளது. பாடல்களின் பலவகை நுட்பங்களை
- எடுத்துக்காட்டி விளக்குகின்றது. இவ்வுரையையும் விளக்கத்தையும் பலர் மேற்கொண்டனர். இவ்வுரையிலும் சில திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். முனைவர் உ. வே. சாமிநாத ஐயர். திருவள்ளுவமாலையில், 1330 அருங்குறளும் என்னும் செய்யுளில் (16) உள்ள ‘வீற்றிருக்கலாம்’ என்ற சொல்லிற்கு ‘ஒரு சபை நடுவிலே உயர்வாகிய ஆசனத்தில் ஏறியிருக்கலாம்’ என்று சரவணப் பெருமாளையர்’ எழுதிவிட்டார். கவலையற்றிருக்கலாம் என்பதே அதன் பொருள். சிந்தாமணி உரையிலும், திருமுருகாற்றுப்படையிலும் வீற்றிருத்தல் என்பதற்குக் கவலையற்றிருத்தல் என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருக்கிறார்” என்று உரைக்கின்றார்கள்.
- பிரபுலிங்க லீலை, நைடதம் இவற்றின் பிற்பகுதிக்கு உரைகண்ட கந்தப்பையர் இவர் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.