குரும்பசிட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குரும்பசிட்டி
Kurumbasiddy
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்

குரும்பசிட்டி (Kurumbasiddy)[1] இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பலாலிக்குத் தெற்காகவும், யாழ்ப்பாண நகரிலிருந்து ஏறத்தாழ 10 மைல் தொலைவில் வடக்கேயும் அமைந்துள்ள ஒரு கிராமம். ஏறத்தாழ 1.4 சதுரமைல் நிலப்பரப்புக் கொண்ட செம்பாட்டு மண் கிராமம். வேளாண்மையே இங்கு முக்கிய தொழிலாகும். 1986 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கை மூலமாக இக்கிராமத்தில் உள்ள அநேகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. இப்பிரதேசமானது இலங்கை அரசாங்கத்தினால் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மீளக் குடியமர முடியாமலுள்ளது.

குரும்பசிட்டியின் வட எல்லையில் பலாலி விமான நிலையமும் பலாலி இராணுவத்தளமும் அமைந்துள்ளன. கிழக்கே வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. ஈழகேசரி பொன்னையா வீதி இங்குள்ள முக்கிய தெரு. இது பலாலி வீதியையும் மல்லாகம் - கட்டுவன் வீதியையும் இணைக்கிறது.

கோவில்கள்

  • குரும்பசிட்டி சித்தி விநாயகர் ஆலயம்
  • முத்துமாரி அம்பாள் கோவில்
  • குரும்பசிட்டி கிழக்கு அண்ணமார் கோயில்
  • குரும்பசிட்டி கிழக்கு ஞானவைரவர் ஆலயம்
  • ஆறாத்தை வைரவர் கோயில்

பாடசாலைகள்

  • பொன். பரமானந்தர் மகா வித்தியாலயம்

இங்கு வாழ்ந்த பெரியோர்கள்

வெளியிணைப்புக்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=குரும்பசிட்டி&oldid=39939" இருந்து மீள்விக்கப்பட்டது