கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது
கட்டுரை, கவிதை, புனைகதை, நாடகம், ஆங்கிலப் படைப்புகள் மற்றும் பிற மாநில மொழி ஆகிய 6 பிரிவுகளில் அளிக்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது என்பது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஏற்படுத்தியுள்ள (பபாசி) அறக்கட்டளையின் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திற்குச் சிறந்த முறையில் பங்களிக்கும் தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுக்கொருமுறை அளிக்கப்படும் விருதாகும்.
அமைப்பு
2007 ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 30 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி விழாவில் கலந்து கொண்ட அப்போதைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கிய ரூபாய் ஒரு கோடியில் அறக்கட்டளை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]அந்த அறக்கட்டளையின் பெயரில் ஒரு கோடி ரூபாய் வங்கி வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் வங்கி வட்டி வருமானம் மூலம் வருடம் தோறும் தமிழ் எழுத்தாளர்கள் நான்கு பேர், பிற இந்திய மொழிகளுக்கான எழுத்தாளர் ஒருவர், ஆங்கில இலக்கிய எழுத்தாளர் ஒருவர் என மொத்தம் ஆறு எழுத்தாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்படுகிறது. 2008 ம் ஆண்டு முதல் இவ்விருது அளிக்கப்படுகிறது.[சான்று தேவை]
2009 ஆம் ஆண்டுக்கான விருது பெற்றவர்கள்
2009 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள். [1]
- தமிழ் எழுத்தாளர் (கவிதை) -பேராசிரியர் சி. மணி
- தமிழ் எழுத்தாளர் (புதினம்) -ஆர். சூடாமணி
- தமிழ் எழுத்தாளர் (நாடகம்) - "கூத்துப்பட்டறை' முத்துசாமி.
- தமிழ் எழுத்தாளர் (கட்டுரை) - முனைவர் க. நெடுஞ்செழியன்
- கன்னட இலக்கியம் - கிரிஷ் கர்னாட்
- இந்திய ஆங்கில எழுத்தாளர் - எஸ். முத்தையா.
2010 ஆம் ஆண்டுக்கான விருது பெற்றவர்கள்
2010 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள். [2]
- தமிழ் எழுத்தாளர் (கவிதை) -தமிழ் அறிஞர் ச.வே. சுப்பிரமணியன். மற்றும் கவிஞர் ஈரோடு தமிழன்பன்
- தமிழ் எழுத்தாளர் (நாடகம்) - அரு. அழகப்பன் .
- தமிழ் எழுத்தாளர் (கதை -புனைகதை) - கு. சின்னப்ப பாரதி)
- தெலுங்கு இலக்கியம் - அபுரி சாயாதேவி
- ஆங்கில இலக்கியம் - முனைவர் சோ. ந. கந்தசாமி.
2011 ஆம் ஆண்டுக்கான விருது பெற்றவர்கள்
2011 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள்
- தமிழ் எழுத்தாளர் (கட்டுரை) - முனைவர் தமிழண்ணல்
- தமிழ் எழுத்தாளர் (கவிதை) - கவிக்கோ அப்துல் ரகுமான்
- தமிழ் எழுத்தாளர் (நாடகம்) - பேராசிரியர். கே. இராமானுஜம்.
- தமிழ் எழுத்தாளர் (கதை -புனைகதை) - சி. எஸ். இலட்சுமி (அம்பை)
- மராத்தி இலக்கியம் - அர்ஜூன் டாங்லே, மும்பை
- ஆங்கில இலக்கியம் - பேராசிரியர். கா. செல்லப்பன்
2012 ஆம் ஆண்டுக்கான விருது பெற்றவர்கள்
2012 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள்.[3]
- தமிழ் எழுத்தாளர் (தமிழ் நாடக இலக்கியம்) - கே. பி. அறிவானந்தம்
- தமிழ் எழுத்தாளர் (தமிழ் கவிதை இலக்கியம்) - சிற்பி பாலசுப்பிரமணியம்
- தமிழ் எழுத்தாளர் (தமிழ் உரைநடை இலக்கியம்) - முனைவர் ம. ரா. போ. குருசாமி
- தமிழ் எழுத்தாளர் (தமிழ் புனை இலக்கியம்) - விக்கிரமன்
- பிற இந்திய மொழி எழுத்தாளர் - எட்வின் ஜோசப் பிரான்சிஸ் டிசௌசா
- ஆங்கில இலக்கியம் - பிரேமா நந்தகுமார்
2017 ஆம் ஆண்டுக்கான விருது பெற்றவர்கள்
2017 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெற்ற எழுத்தாளர்கள்.[4]
- தமிழ் எழுத்தாளர் (புனை கவிதை) - பிரபஞ்சன்
- தமிழ் எழுத்தாளர் (கவிதை) - ஆலந்தூர் கோ. மோகனரங்கன்
- தமிழ் எழுத்தாளர் (நவீன இலக்கியம்) - கலாப்ரியா
- தமிழ் எழுத்தாளர் (தமிழ் உரைநடை இலக்கியம்) - முனைவர் சுப. வீரபாண்டியன்
- தமிழ் எழுத்தாளர் (தமிழ் இலக்கியம்) - தீபம் எஸ். திருமலை
- தமிழ் இதழாளர் - கே. ஜீவபாரதி
- சிறுவர் இலக்கியம் - பி. எல். ராஜேந்திரன்
2020 ஆம் ஆண்டுக்கான விருது பெற்றவர்கள்[5]
- 2020 ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள்.
- தமிழ் எழுத்தாளர் (கவிதை) - அறிவுமதி
- தமிழ் எழுத்தாளர் (நாவல்) - பொன்னீலன்
- தமிழ் எழுத்தாளர் (உரைநடை) - ந. முருகேசபாண்டியன்
- தமிழ் எழுத்தாளர் (நாடகம்) - அ. மங்கை
- தமிழ் எழுத்தாளர் (ஆங்கிலம்) - ஆர். பாலகிருஷ்ணன்
- பிற இந்திய மொழி - சித்தலிங்கையா
2021 ஆம் ஆண்டுக்கான விருது பெற்றவர்கள்
2021 ஆம் ஆண்டுக்கான விருது பெற்ற ஆறு எழுத்தாளர்கள்.[6]
- தமிழ் எழுத்தாளர் (கவிதை) - அபி
- தமிழ் எழுத்தாளர் (புனைவிலக்கியம்) - இராசேந்திர சோழன்
- தமிழ் எழுத்தாளர் (உரைநடை) - எஸ். ராமகிருஷ்ணன்
- தமிழ் எழுத்தாளர் (நாடகம்) - வெளி ரங்கராஜன்
- தமிழ் எழுத்தாளர் (ஆங்கிலம்) - மருதநாயகம்
- பிற இந்திய மொழி - நதித் சாகியா (காஷ்மீரி)
மேற்கோள்கள்
- ↑ கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறும் எழுத்தாளர்கள்
- ↑ "ஆறு எழுத்தாளர்களுக்கு விருது" இம் மூலத்தில் இருந்து 2017-09-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170905074119/http://www.writerpara.com/paper/?p=1001.
- ↑ விக்கிரமன், சிற்பி பாலசுப்பிரமணியம் உள்பட 6 எழுத்தாளர்களுக்கு விருது[தொடர்பிழந்த இணைப்பு] (தினமணி)
- ↑ [1] விருதுகள் (தமிழ் இந்து)
- ↑ "360: கலைஞர் பொற்கிழி விருது". இந்துதமிழ். https://www.hindutamil.in/news/literature/545304-kalaingar-porkili-virudhu.html. பார்த்த நாள்: 28 October 2022.
- ↑ "6 எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருது – பபாசி அறிவிப்பு". https://tamil.indianexpress.com/literature/bapasi-announced-muthamizharinjar-dr-kalaignar-porkizhi-award-for-writers-349463/. பார்த்த நாள்: 28 October 2022.