கலாப்ரியா
கலாப்ரியா (பிறப்பு: சூலை 30, 1950) தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர்.
கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். சிறு வயதில் எம்.ஜி.ஆர் ரசிகனாய் தி. மு. க தொண்டனாக தீவிரமாக இயங்கினார்.
அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார்.[1] பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார். கலாப்ரியாவின் கவிதைகளில் பாலுணர்வு வெளிப்பாடுகளும் சில வேளைகளில் வன்முறையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் கருதுவதுண்டு.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணி நிறைவு பெற்றவர். தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'. இவர் 1974 ஆம் ஆண்டில் நிர்மால்யம் என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.
படைப்புகள்
வரிசை எண் !!வெளியான ஆண்டு !! நூலின் பெயர்!!வகை!!பதிப்பகம் !!குறிப்புகள் | |||||
---|---|---|---|---|---|
01 | 1973 | வெள்ளம் | கவிதை | ||
02 | 1973 | தீர்த்தயாத்திரை | கவிதை | ||
03 | 1980 | மற்றாங்கே | கவிதை | வாசகசாலை | |
04 | 1082 | எட்டயபுரம் | கவிதை | அன்னம், சிவகங்கை | பாரதியார் நூற்றாண்டு வெளியீடு |
05 | 1985 | சுயம்வரம் மற்றும் கவிதைகள் | கவிதை | ||
06 | 1993 | உலகெல்லாம் சூரியன் | கவிதை | ||
07 | 1994 | கலாப்ரியா கவிதைகள்[2] | கவிதை | 1994 வரை வெளிவந்த கவிதைத்தொகுப்புகளின் தொகுப்பு. இதன் மறுபதிப்பு 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது | |
08 | 2000 | அனிச்சம் | கவிதை | ||
09 | 2000 | கலாப்ரியா கவிதைகள் | கவிதை | தமிழினி | 2000 வரையிலான அனைத்துக் கவிதைகளும் |
09 | 2003 | வனம் புகுதல் | கவிதை | ||
10 | 2008 | எல்லாம் கலந்த காற்று | கவிதை | ||
11 | 2009 | நினைவின் தாழ்வாரங்கள் | கட்டுரைத் தொகுப்பு | ||
12 | 2010 | ஓடும் நதி | கட்டுரைத் தொகுப்பு | ||
13 | 2010 | கலாப்ரியா கவிதைகள் - பேட்டிகள், திறனாய்வுகள், கருத்துகள் உள்ளடக்கியது | |||
14 | 2011 | உருள் பெருந்தேர் | கட்டுரைத் தொகுப்பு | ||
15 | 2011 | நான் நீ மீன் | கவிதைகள் | ||
16 | 2013 | உளமுற்ற தீ | கவிதைகள் | ||
17 | 2013 | சுவரொட்டி | கட்டுரைத் தொகுப்பு | ||
18 | 2014 | காற்றின் பாடல் | கட்டுரைத் தொகுப்பு | ||
19 | 2015 | மறைந்து திரியும் நீரோடை | கட்டுரைத் தொகுப்பு | ||
20 | 2015 | தண்ணீர்ச் சிறகுகள் | கவிதைகள் | ||
21 | 2016 | !தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி | !கவிதைகள் | !டிஸ்கவரி புக் பாலஸ் | |
22 | 2016 | சொந்த ஊர் மழை | கவிதைகள் | நற்றிணை பதிப்பகம் | |
23 | 2016 | பனிக்கால ஊஞ்சல் | கவிதைகள் | உயிர்மை பதிப்பகம் | |
24 | 2016 | மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள் | கட்டுரைத் தொகுப்பு | சந்தியாபதிப்பகம் | |
25 | 2016 | என் உள்ளம் அழகான வெள்ளித்திரை | கட்டுரைத் தொகுப்பு | சந்தியா பதிப்பகம் | |
26 | 2016 | சில செய்திகள் சில படிமங்கள் | கட்டுரைத் தொகுப்பு | சந்திய பாதிப்பகம் | |
27 | 2016 | போகின்ற பாதையெல்லாம் பூமுகம் காணுகின்றேன் | கட்டுரைத் தொகுப்பு | அந்திமழை பதிப்பகம் | |
28 | 2017 | பேனாவுக்குள் அலையாடும் கடல் | கவிதைகள் | டிஸ்கவரி புக் பாலஸ் | |
29 | 2017 | வேனல் | நாவல் | சந்தியா பதிப்பகம் | முதல் நாவல் |
30 | 2018 | வானில் விழுந்த கோடுகள் | சிறுகதைகள் | சந்தியா பதிப்பகம் | |
31 | 2018 | சொல் உளி | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் | |
32 | 2018 | பாடலென்றும் புதியது | தமிழ் சினிமா பற்றிய் கட்டுரைகள் | சந்தியா பதிப்பகம் | |
33 | 2018 | அன்பெனும் தனி ஊசல் | கட்டுரைகள் | சப்னம் பதிப்பகம் | கோவை |
34 | 2019 | பெயரிடப்படாத படம் | நாவல் | சந்தியா பதிப்பகம் | |
35 | 2019 | மௌனத்தின் வயது | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் | |
36 | 2020 | கலாப்ரியா கவிதைகள் இரண்டாம் தொகுதி | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் | பெருந்தொகுப்பு |
37 | 2020 | பேரருவி | நாவல் | சந்தியா பதிப்பகம் | |
38 | 2021 | மாக்காளை[3] | நாவல் | சந்தியா பதிப்பகம் | |
39 | 2021 | கல்லில் வடித்த சொல் போலே | கட்டுரைகள் நேர்காணல்கள் | சந்தியா பதிப்பகம் | |
40 | 2021 | சங்க காலத்து வெயில் | கவிதைகள் | சந்தியா பதிப்பகம் |
விருதுகள்
- தமிழக அரசின் கலைமாமணி விருது
- கவிஞர் சிற்பி இலக்கியவிருது
- ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை
- சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010)
- கண்ணதாசன் இலக்கியவிருது - கோவை - 2012
- திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - உருள் பெருந்தேர்- உரைநடை/புதினம்- 2012
- கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
- கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
- வைரமுத்துவின் கவிதைத் திருவிழாவில் சிறப்பிக்கப்பட்டது.
- தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வழங்கும் பட்டயம் மற்றும் ரூபாய் ஒருலட்சம் அடங்கிய கலைஞர் மு.கருணாநி பொற்கிழி விருது - 2017
- திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளி வழங்கும் “அறிஞர் போற்றுதும்” விருது -2017
- அந்திமழை பதிப்பகம் வழங்கும் ‘கலைஞன் போற்றுதும் விருது -2017
- திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அடங்கிய மனோன்மணியம் சுந்தரனார் விருது - 2017[4]( 12.10.2018 அன்று வழங்கப்பட்டது)
- கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டம் வழங்கும் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் அடங்கிய “ஜெயகாந்தன் விருது” - 2018
- அமெரிக்கவாழ் தமிழர்களின் ‘விளக்கு’ அமைப்பு வழங்கும் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் அடங்கிய ‘புதுமைப்பித்தன் நினைவு விருது - 2019
- பாலகுமாரன் அறக்கட்டளை சென்னை, வழங்கும் பட்டயம் மற்றும் ஐம்பதினாயிரம் அடங்கிய பாலகுமாரன் இலக்கிய விருது 2020
- தமிழரசி அறக்கட்டளை சீரோ டிகிரி பதிப்பகம் வழங்கும் ஒண்ணரை லட்சம் மதிப்புள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது 2022
மேற்கோள்கள்
- ↑ "தமிழறிஞர்கள் அறிவோம்:கலாப்பிரியா". தினமணி. https://www.dinamani.com/specials/kalvimani/2014/mar/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2-859420.html. பார்த்த நாள்: 6 December 2022.
- ↑ "'கலாப்ரியா கவிதைகள்". நூல் உலகம். https://www.noolulagam.com/s/?stext=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0. பார்த்த நாள்: 6 December 2022.
- ↑ "கீழ் நடுத்தர மக்களின் வாழ்க்கையும், கொண்டாட்டங்களும், ஏமாற்றங்களுமே `மாக்காளை!'" - கலாப்ரியா". ஆனந்த விகடன். https://www.vikatan.com/arts/literature/tamil-writer-kalapriya-sharings-about-his-new-book-release. பார்த்த நாள்: 6 December 2022.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=2119732