கடைநிலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் கடைநிலை என்பதும் ஒன்று. இது பாடாண் திணையின் துறை. புறநானூற்றில் இத்துறைப் பாடல்கள் 11 உள்ளன. அவை 127, 382, 383, 384, 391, 392, 393, 394, 395, 396, 398

இலக்கண நூல் விளக்கம்

  • கடைநிலையைத் தொல்காப்பியம் இதனை, நெடுந்தொலைவிலிருந்து வரும் வருத்தம் நீங்க அரசனுக்கு எடுத்துரைக்குமாறு வாயில் காவலனை வேண்டுவது எனக் குறிப்பிடுகிறது. [1]
  • புறப்பொருள் வெண்பாமாலை பாடாண் திணையின் 48 துறைகளில் ஒன்றாக இதற்கு ‘வாயில் நிலை’ என்னும் பெயரிட்டுக் குறிப்பிடுகிறது. [2]

புறநானூற்றில் கடைநிலை

நின்று பாட அவர்கள் புலவரைப் பேணிப் பரிசு வழங்கிப் பாதுகாத்தனர்.

அடிக்குறிப்பு

  1. சேய்வரல் வருத்தம் வீட, வாயில் காவலற்கு உரைத்த கடைநிலை - தொல்காப்பியம் புறத்திணையியல் 87
  2. புரவலன் நெடுங்கடை குறுகி என் நிலை
    கலவின்று உரை எனக் காவலற்கு உரைத்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை – 159
  3. புறம் 127,
  4. புறம் 382,
  5. புறம் 383,
  6. புறம் 384,
  7. புறம் 391,
  8. புறம் 392,
  9. புறம் 393,
  10. புறம் 394,
  11. புறம் 395,
  12. புறம் 396,
  13. புறம் 398
"https://tamilar.wiki/index.php?title=கடைநிலை&oldid=16793" இருந்து மீள்விக்கப்பட்டது