எஸ். டி. சிவநாயகம்
எஸ். டி. சிவநாயகம் |
---|
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எஸ். டி. சிவநாயகம் |
---|---|
பிறப்புபெயர் | சிவன் கோவிலடி, திருகோணமலை, இலங்கை சூலை 2, 1921 |
இறப்பு | ஏப்ரல் 22, 2000 (அகவை 78) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர், பத்திரிகையாளர் |
பெற்றோர் | சின்னத்தம்பி |
எஸ். டி. சிவநாயகம் (சூலை 2, 1921 – ஏப்ரல் 22, 2000) இலங்கையின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுள் ஒருவர். இவர் கட்டுரைகள், சிறுகதைகள் பல எழுதியுள்ளார். மட்டக்களப்பில் பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளைப் பரப்பியவர்களுள் இவரும் ஒருவர்.[1]
இதழியல் துறையில்
எஸ். டி. சிவநாயகம், திருகோணமலை, சிவன்கோவிலடியில் சின்னத்தம்பி என்பவருக்குப் பிறந்தார்.[1] 1948 ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகை முலம், தனது பத்திரிகைப் பணியை ஆரம்பித்தார். பின்னர், சுதந்திரன் வார இதழிலும், வீரகேசரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதன் பிறகு தினபதி, சிந்தாமணி முதலான தேசிய தினசரி மற்றும் வார இதழை உருவாக்கி அவற்றின் பிரதம இதழாசியராகவும், பிற்காலத்தில் ஆசிரிய பீடத்தின் பணிப்பாளராகவும் (அந்த நிறுவனம் 1974 ஆம் ஆண்டில் மூடப்பட்ட காலம் வரை) பணியாற்றினார். அதன் பின்னர் மாணிக்கம் என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சமூகப் பணி
எஸ். டி. சிவநாயகம், சமய, சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். கொழும்பு சத்திய சாயி பாபா மத்திய நிலைத்தின் தலைவராக 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்றினார். 1975 ஆம் ஆண்டில் இந்தியாவில் புட்டபர்த்தி நகரில் நடைபெற்ற, உலக சாயி நிறுவனங்களின் இரண்டாவது மாநாட்டில் சிறப்புப் பிரதிநிதியாகப் பங்குபற்றினார். 1979 ஆம் ஆண்டில் அப்போதைய நீதி அமைச்சராகவும், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய கே. டபிள்யூ. தேவநாயகத்தின் உதவியுடன் ‘சத்ய சாயிபாபா அறக்கட்டளையகம்’ எனும் சாயி அமைப்பையும் உருவாக்கினார்.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 தமிழ் ஊடகத்துறையின் ஜாம்பவான் எஸ். டி. சிவநாயகம், ந. வித்தியாதரன், சூலை 2, 2021