உன்னைச் சரணடைந்தேன்
உன்னைச் சரணடைந்தேன் | |
---|---|
இயக்கம் | சமுத்திரக்கனி |
தயாரிப்பு | எஸ். பி. பி. சரண் |
கதை | சமுத்திரக்கனி |
இசை |
|
நடிப்பு | |
ஒளிப்பதிவு | இராஜேஷ் யாதவ் |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 19, 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உன்னைச் சரணடைந்தேன் என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் நாடகத் திரைப்படமாகும். சமுத்திரக்கனி இயக்கிய இப்படத்தில் வெங்கட் பிரபு, எஸ். பி. பி. சரண் மற்றும் மீரா வாசுதேவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி திரைப்பட இயக்குனராக அறிமுகமான இப்படத்தை சரணின் கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் தயாரித்தது. இப்படத்திற்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைத்த பாடல்கள் இடம்பெற்றன. இந்த படம் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, வெளியானது. இது விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், இரண்டு தமிழக அரசு திரைப்பட விருதுகளையும் வென்றது என்றாலும், இது லாபகரமான படம் அல்ல என்று சரண் கூறினார்.[1] இப்படத்தின் பின்னர் தெலுங்கு மறு ஆக்கமான நாலோவை (2004) சமுத்திரக்கனி இயக்கினார்.
நடிகர்கள்
- வெங்கட் பிரபு கண்ணனாக
- எஸ். பி. பி. சரண் நந்தாவாக
- மீரா வாசுதேவன் கண்ணனின் காதலி பாபியாக
- சந்தோஷி நந்தாவின் காதலி தேஜாவாக
- நிழல்கள் ரவி
- இளவரசு தேஜாவின் தந்தையாக
- ரியாஸ் கான்
- பரவை முனியம்மா
- அஞ்சு
- ஹரி பிரசாந்த்
இசை
இப்படத்திற்கான இசையை சரணின் தந்தையான பிரபல பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மேற்கொண்டார். மேலும் படத்தில் வெங்கட் பிரபுவின் தந்தையான கங்கை அமரன் ஆறு பாடல்களுகான வரிகளை எழுதினார். பாலசுப்பிரமண்யம் மூன்று பாடல்களை பாடினார், அதே நேரத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் ம. சு. விசுவநாதன் மற்றும் இளையராஜா ஆகியோர் முதல் பாடலை இணைந்து பாடினர். பாலசுப்பிரமண்யம் தவிர, அவரது சகோதரி எஸ். பி. சைலஜா மற்றும் அவரது மகள் பல்லவி ஆகியோரும் ஒவ்வொரு பாடல்களை பாடினர். படத்தின் பின்னணி இசையை ஸ்ரீனிவாச மூர்த்தி அமைத்தார்.
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "நட்பு நட்பு" | ம. சு. விசுவநாதன், இளையராஜா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:06 | |||||||
2. | "கல்லூரி வாழ்வில்" | எஸ். பி. சைலஜா | 4:39 | |||||||
3. | "இப்போ இங்கே" | வெங்கட் பிரபு | 5:36 | |||||||
4. | "கண்ணா கலக்கமா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. பல்லவி | 5:11 | |||||||
5. | "ஒரு வழிப்பாதை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 5:20 | |||||||
6. | "ஆளப் பிறந்தவண்டா" | பரவை முனியம்மா | 0:32 |
விருதுகள்
- தமிழ்நாடு அரசு திரைப்பட விருது சிறப்பு பரிசு
- சிறந்த கதாசிரியருக்கான தமிழக அரசு திரைப்பட விருது - சமுத்திரக்கனி
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101206074733/http://www.thehindu.com/arts/cinema/article927574.ece.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2006-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060218164138/http://www.cinesouth.com/masala/hotnews/new/13022006-1.shtml.