ஆசுகவி
Jump to navigation
Jump to search
ஆசுகவி எனப்படுவோர் கொடுத்த பொருளில் அடுத்த பொழுதில் கவிதையாகப் பாடக்கூடிய திறமை படைத்த புலவர்.[1] ஆசுகவி, மதுரகவி, சித்திரக் கவி, வித்தார கவி என்னும் நான்கு வகையான கவிதைப் பாகுபாட்டில் ஒன்று.
ஆசுகவிகள்
- காளமேகப் புலவரை ஒரு ஆசுகவி என்று இலக்கியம் கூறும்.
- சிந்நயச் செட்டியாரை மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, "தன் மாணவர்களில் ஆசுகவி பாடக்கூடியவர் சிந்நயச் செட்டியார் ஒருவரே" என்று தன்னிடம் கூறியதாக உ. வே. சாமிநாதையர் தமது வாழ்க்கை வரலாற்றில் கூறியிருக்கிறார்.
- கல்லடி வேலுப்பிள்ளை, ஈழத்துக் கவிஞர்.
அடிக்குறிப்பு
- ↑
கொடுத்த பொருளில் தொடுத்த இன்பத்தில்
அடுத்த பொழுதில் பாடுவது ஆசுகவி (திவாகர நிகண்டு பகுதி 12)