அண்ணாமலையார் வண்ணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அண்ணாமலையார் வண்ணம் என்னும் நூல் சேறைக் கவிராசபிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16ஆம் நூற்றாண்டு.

  • வண்ணம் என்பது ஒருவகை.
  • வண்ண இசை என்பது மற்றொரு வகை.

இந்த நூல் வண்ண இசையால் ஆனது.

இந்த நூலிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு

மலர்தானை வனசமலர் தனைப்போல எழுதிடினும்
மலர்ப்பாய வதனமென நடந்து வருமோ
உறுப்பான திலகநுதல் விதுப்போல எழுதிடினும்
உவப்பான குறுவியர் வரும்பி வருமோ
கணிக்கோல மிடறுகமு கிணைப்போல எழுதிடினும்
மரப்பாவை உருகுமிசை இன்பம் வருமோ –
- விரலெழுதின் வீணை பேச வருமோ
பாடல் சொல்லும் செய்தி

எழுதிய மலர் இவளது முகம் போல நடந்துவர முடியுமா?
பொட்டு வைத்த இவள் நுதலை எழுதினால் அதில் வியர்வை அரும்புமா?
உடுக்குப் போன்ற இவளது மிடற்றை (கழுத்தை) எழுதினால் மரப்பாச்சிப் பொம்மையையே உருகச் செய்யும், விரல் தடவும் வீணையிசை போன்ற குரல் வளம் அதிலிருந்து வருமா?

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005
"https://tamilar.wiki/index.php?title=அண்ணாமலையார்_வண்ணம்&oldid=17088" இருந்து மீள்விக்கப்பட்டது