அக்னி தேவி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

அக்னி தேவி (Agni Devi) என்பது 2019 ஆம் ஆண்டி வெளிவந்த இந்திய தமிழ் திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை  ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா முறையே தயாரித்து இயக்கினார்கள். இத்திரைப்படம் ஜேபிஆர், ஸ்டாலின் ஆகியோரினால் ஜெய் பிலிம் புரொடக்ஷன்ஸ் மற்றும் சீட்டோவா ஸ்டுடியோஸின் கீழ் தயாரிக்கப்பட்டது.[1] படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் பாபி சிம்ஹா, மது மற்றும் ரம்யா நம்பீசன் நடித்திருக்கின்றனர். ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கியுள்ளனர். மேலும் தீபக் தொகுத்துள்ளார். படத்திற்கு ஜேக்ஸ் பெஜோய் இசையமைத்துள்ளார்.[2]

கதை

நேர்மையான காவல் அதிகாரியான அக்னி தேவ் ஐ.பி.எஸ் (பாபி சிம்ஹா) ஒரு ஊடகவியலாளரின் கொடூரமான கொலை குறித்து விசாரணை செய்து வருகிறார். விசாரணைகளை தீவிரப்படுத்தும் போது காவல் துறையின உயர் அதிகாரியான (போஸ் வெங்கட்)  விசாரணைக்கு மேற்கொள்வதைத் நிறுத்துமாறு கூறுகிறார். காவல் துறையின் மூத்த அதிகாரியை மோசமான அரசியல்வாதியான சகுந்தலா தேவியின் (மது பாலா) மிரட்டியுள்ளார் என்பதை அக்னி தேவ் உணருகிறார். அக்னி தேவ் நான்கு வயதில் இழந்த அவரது தாயார் தான் சகுந்தலா தேவி என்று தெரிய வருகிறது. சகுந்தலா தேவியை  சமாளித்து குற்றவாளியை கைது செய்வதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

பாபி சிம்ஹா - அக்னி தேவ் ஐ.பி.எஸ்

மது - சகுந்தலா தேவி

ரம்யா நம்பீசன் - தீபா

சதீஸ்- உதய் ஐ.பி.எஸ்

எம். எசு. பாசுகர். - மணிமாறன் அரசியல்வாதி

டெல்லி கணேஷ் - காவலதிகாரி

லிவிங்ஸ்டன் - அக்னியின் தந்தை

பாஸ் வெங்கட் - காவல் துறை உயர் அதிகாரி

சஞ்சீவ் - தீபக்

தயாரிப்பு

இந்திரைப்படத்தில் பாபி சிம்ஹா காவல் அதிகாரியாகவும் ,மதுபாலா சகுந்தலா தேவி என்ற அமைச்சர் பாத்திரத்தில் எதிர்மறையான வேடத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் புதினத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டது. அக்னி தேவி படத்தின் முதல் பார்வை சுவரிதழ் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 6 அன்று வெளியிடப்பட்டது.[3] 2019 ஆம் ஆண்டு சனவரியில் இத்திரைப்படத்தின் பெயர் அக்னி தேவி மாற்றப்பட்டது. இத்திரைப்படம் வசூலில் தோல்வியை சந்தித்தது.[4]

சர்ச்சை

முன்னணி நடிகர் பாபி சிம்ஹா படம் வெளிவருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு இயக்குனர் ஜான் பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் தான் ஐந்து நாட்கள் மட்டுமே படத்தில் நடித்துள்ளதாகவும் அவரிடம் கூறப்பட்ட திரைக்கதைக்கு ஒத்திசைவற்ற காட்சிகளை இயக்குனர் படமாக்கியதால் அவர் விலகியதாகவும் தெரிவித்தார். அவர் படத்தில் பெரும்பாலான காட்சிகள் டூப் மற்றும் வி.எஃப்.எக்ஸ் மூலம் படமாக்கப்பட்டன என்று குறிப்பிட்டார்.[5] இந்த படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட போதிலும் தமிழகம் முழுவதும் நாடக வெளியீட்டைக் கொண்டிருந்தது. ராஜேஷ்குமாரின் புதினத்தை மையமாக கொண்டு படமாக்கப்படுவதாக தெரிவித்த இயக்குனர் நான்காவது நாள் படப்பிடிப்பில் அதிலிருந்து விலகிச் சென்றதாக கூறினார். ஷாம் சூர்யா என்ற இணை இயக்குனரின் திடீர் ஈடுபாட்டால் சிம்ஹா அதிருப்தி அடைந்தார். இந்த பிரச்சினையை இணக்கமாக தீர்ப்பதற்கு நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்த போதிலும் சிம்ஹா ஒத்துழைக்க மறுத்தார். நீதித்துறை நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, மீரா ஜாக்கிரதை (2016) ஆகிய திரைப்படங்களில் நடிகர் சங்கம் அவருக்கு உதவத் தவறிவிட்டதை எடுத்துரைத்தார்.[6]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அக்னி_தேவி&oldid=29842" இருந்து மீள்விக்கப்பட்டது