அகல் விளக்கு (புதினம்)
அகல் விளக்கு (Agalvilakku) என்பது மு. வரதராசன் இயற்றிய புதினமாகும்.[1] இரு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் சமுதாய சிந்தனைகளைக் கூறியுள்ளார்.[2]
சமுதாய கருத்துகள்
சந்திரன், வேலய்யன் என்ற இரு நண்பர்களின் வாழ்க்கையைக் காட்டுகிறது.சந்திரன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான், ஆனால் அவள் அவனை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறாள்.ஆதலால், சந்திரனின் வாழ்க்கை கவலைக்கிடமாக மாறுகிறது.வேலய்யனுக்கு ஒரு நல்வாழ்க்கை கிடைக்கிறது.பின்,அவன் சந்திரனைத் திருத்த முயல்கிறான்.இறுதியில், சந்திரன் இறந்து விடுகிறான்.இக்கதை இளைஞர்களுக்கு ஒரு பாடமாகவும் அமைகிறது.
விருது
மு. வ. வின் அகல்விளக்கு எனும் இந்நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இவரது அகல் விளக்குடன் பல நூல்கள், ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "அகல் விளக்கு [Agal Vilakku]", Goodreads (in English), retrieved 2024-05-04
- ↑ "அகல் விளக்கு - Agal Vilakku - டாக்டர் மு. வரதராசன் நூல்கள் - Dr. M. Varadharajan Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", சென்னை நூலகம், retrieved 2024-05-04