வேலையில்லா பட்டதாரி 2

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேலையில்லா பட்டதாரி 2
இயக்கம்சவுந்தர்யா ரஜினிகாந்த்
தயாரிப்புதனுஷ்
எஸ். தாணு
திரைக்கதைசவுந்தர்யா ரஜினிகாந்த்
இசைஅனைத்து பாடல்கள்:
சீன் ரோல்டான்
பின்னணி இசை:
சீன் ரோல்டான்,
அனிருத் ரவிசந்தர்
நடிப்புதனுஷ்
கஜோல்
அமலா பால்
விவேக்
ரித்து வர்மா
ரிஷிக்கேஷ்
சமுத்திரக்கனி
சரண்யா பொன்வண்ணன்
அடித் அருண்
ஒளிப்பதிவுசமீர் தாஹீர்
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
கலையகம்வுண்டர்பார் படங்கள்
விநியோகம்கலைபுலி எஸ். தாணு
வெளியீடுஆகத்து 11, 2017 (2017-08-11)
ஓட்டம்129 minutes
நாடுஇந்தியா
மொழிதமிழ் தெலுங்கு
ஆக்கச்செலவு8 crore
(including promotional costs)[1]வார்ப்புரு:Better

வேலையில்லா பட்டதாரி (Velaiyillaa Pattathaari 2) என அறியப்படும் வேலையில்லா பட்டதாரி 2, சௌந்தர்யா ரஜினிகாந்தால் இயக்கப்பட்ட 2017ன் இந்திய தமிழ்-தெலுங்கு நகைச்சுவை நாடகத் திரைப்படம் ஆகும்.[2] தனுஷ், அமலா பால், விவேக், ரிஷிகேஷ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருடன் இணைந்து காஜோல் இப்படத்தில் நடித்துள்ளார்.தனுஷ், நடிப்பு தவிர, இப்படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்துடன் இனைந்து தயாரிக்கித்துள்ளார், படத்திற்கான கதையையும் உரையாடல்களையும் எழுதியுள்ளார். என். ராமசாமியும் இணைந்து இந்த படத்தை தயாரித்தார். பின்னணி இசை சீன் ரோல்டனால் இயற்றப்பட்டது. இது ஆகஸ்ட் 11, 2017 அன்று உலகளவில் வெளியிடப்பட்டது. ஆரம்பத்தில் ஜூலை 28 அன்று (தனுஷின் பிறந்த நாள்) வெளியீடு செய்ய திட்டமிட்டது .இந்த படம் முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் வி.ஐ.பி 2 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. பின்பு வேளையில்லா பட்டதாரி 2 படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டது. தனுஷ், படத்தின் தமிழ் பதிப்பில் மட்டுமே தன் சொந்த குரலை வெளிப்படுத்தினார்.ஹிந்தி டப்பிங் பதிப்பில் தனுஷின் குரலுக்கு டப்பிங் கலைஞர் சங்கட் மாத்ரே டப்பிங் செய்தார்.

நடிகர்கள்

  • தனுஷ் - ரகுவரன்
  • காஜோல் - வசுந்தரா பரமேஸ்வர்
  • அமலா பால் - டாக்டர் ஷாலினி ரகுவரன் (ரகுவரன் மனைவி)
  • ரிது வர்மா - அனிதா
  • சரண்யா பொன்வண்ணன் - புவனா (ரகுவரன் தாயார்)
  • விவேக் - அழகு சுந்தரம்
  • ரிஷிகேஷ் - கார்த்திக் (ரகுவரன் சகோதரர்)
  • சமுத்திரகனி - ரகுவரன் தந்தை
  • மீரா கிருஷ்ணன் - ஷாலினியின் தாய்
  • எஸ். கதிரேசன் - ஷாலினியின் தந்தை
  • பாலாஜி மோகன் - பாலாஜி
  • எம். ஜே. ஸ்ரீராம் - ராம்குமார் (அனிதாவின் தந்தை)
  • ஜி. எம். குமார் - செட்டியார்
  • ரைசா வில்சன் - வசுந்தராவின் PA
  • லோகேஷ் - வசுந்தராவின் மேலாளர்
  • சரவண சுப்பையா - பிரகாஷ்
  • செல் முருகன் - மாணிக்கம்
  • மிர்ச்சி விஜய் - ரகுவரன் நண்பன்
  • ராஜ் மோகன் - பிரகாஷின் வக்கீல்
  • ப்ளோரண்ட் பெரேரா - பொன்னு ரங்கம்
  • சேதுபதி ஜெயச்சந்திரன் - எம். எஸ். அறிவழகன்
  • ஆண்ட்ரூஸ் - செய்தி வாசிப்பாளர்
  • சிஜோய் வர்கீஸ்

கதை

இந்த படத்தில் அனிதா கட்டுமான நிறுவனத்திற்கு (Anitha Constructions) பணி புரியும் ரகுவரன் (தனுஷ்) ஆண்டின் சிறந்த பொறியியலாளர் விருதை பெற்றுள்ளார். அவரது மனைவி ஷாலினி (அமலா பால்) ஆவார். ரகுவரன் தனது மனைவிக்கு வேலைக்கு செல்வது பற்றி நிராகரிக்கிறார்.தென்னிந்தியாவில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைவரான வசுந்தரா (காஜோல்), ரகுவரனுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறார், ஆனால் அவர் மறுக்கிறார். இதனால் வசுந்தராவின் கோபத்திற்கு ரகுவரன் ஆளாகிறார். ரகுவரனின் வாழ்க்கையில் பல தடைகளை அவர் உருவாக்குகிறார். பின்பு தனுஷ் த்னியாக ஒரு புது நிறுவனத்தை உருவாக்கினார். அதற்கும் பல தடைகளை உருவாக்குகிறார் வசுந்தரா. இப்படத்தில் அம்மா பற்றிய உணர்ச்சிகரமான உரையாடல்கள்,திருக்குறளை வைத்துக் கருத்துக் கூறுவது, ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சென்னை வெள்ளம் பற்றிய காட்சிகள் உள்ளன.[3]

இசை மற்றும் பாடல்கள் தீம் டிராக்- வசுந்தரா- பேரரசி வருகிறாள் "

வேளையில்லா பட்டதாரி 2
Soundtrack
வெளியீடு25 பிப்ரவரி 2017
இசைப் பாணிதிரைப்படத்தின் ஒலிப்பதிவு
நீளம்15:45
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்வுண்டர்பார் ஸ்டூடியோ
இசைத் தயாரிப்பாளர்சீன் ரோல்டான்
தனுஷ்
சீன் ரோல்டான் காலவரிசை
'கதா நாயகன்
(2017)
வேளையில்லா பட்டதாரி 2 'சர்வர் சுந்தரம்
(2017)

அனிருத் ரவிச்சந்தரால் இசையமைக்கப்பட்ட முதல் படத்தில் இருந்து கதாபாத்திரங்கள் மற்றும் தலைப்புக்கு சிறப்பம்சமாக இருந்த சில பின்னணி இசைத் தக்கவைக்கப்பட்டன.[4] 5 பாடல்கள் இடம்பெறும் பாடல் பட்டியல் ஜூன் 25 ஆம் தேதி மும்பையில் வெளியிடப்பட்டது.[5] இப்படத்தை இசையமைத்தவர் சீன் ரோல்டன்.

தமிழ் பாடல்கள்

1. " ரகுவரனின் வாழ்கை - நட டா ராஜா"- தனுஷ், யோகி பி

2. “ஏஞ்சல் ஆஃப் ரகுவரன் - இறைவானை தந்த இறைவியே "- சீன் ரோல்டன், எம் எம் மானசி

3.” ரகுவரன் சித்திரவதை - உச்சத்துல "-தனுஷ்

4.” ரகுவரன் Vs வசுந்தரா- தூரம் நில்லு "- பென்னி தயாள், தனுஷ், சக்திஸ்ரீ கோபாலன்

5. “தீம் டிராக் (வசுந்தரா)-பேரரசி வருகிறாள் "

தெலுங்கு பாடல்கள்

1. நட டா ராஜா- ராகுல் நம்பியார், யோகி பி

2. இருவரம் காடு- சீன் ரோல்டன், எம் எம் மானசி

3. பெல்லனேட்-ரவி ஜி

4. தூரம் நுவே உண்டலோய்- கே ஜி ரஞ்சித், அனன்யா திருமலை

5.தீம் டிராக் (வசுந்தரா)

இந்தி பாடல்கள்

1. சல் ரீ ராஜா-ராகுல் நம்பியார், யோகி பி

2. து மிலி ஹை- அபய் ஜோத்பர்கர், எம். எம். மானசி

3. மேன் கா ராஹா-ரஞ்சித்

4. தூரி ஜாரா பானகே- பென்னி தயாள், சக்திஸ்ரீ கோபாலன்

5.தீம் டிராக் (வசுந்தரா)

தயாரிப்பு

2014 படமான வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு, வேல்ராஜ் மற்றும் தனுஷ், தங்கமகன் (2015) தயாரிப்பில் வேலை செய்தனர், இது முந்தைய படத்தின் தொடர்ச்சியாக பரவலாகப் புகழ் பெற்றது.இப்படத்தின் தயாரிப்புக் கட்டங்களில், தனுஷ் தங்கமகன் ஒரு வித்தியாசமான கதை என்று உறுதிப்படுத்தினார். பின்னர் 2016 நடுப்பகுதியில், தனுஷின் அண்ணி சவுந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் என். ராமசாமி மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோருடன் காதல் கதை ஒன்றுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படத்தின் தலைப்பு "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்". இப்படத்தில் தனுஷுக்கு முக்கிய கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டது.

சோனம் கபூர், காஜல் அகர்வால் மற்றும் மஞ்சிமா மோகன் உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், இந்த திட்டம் நிறைவேறத் தவறிவிட்டது, மற்றும் திடீர் நிகழ்வுகள் காரணமாக தனுஷ் தனது முந்தைய படமான வேலையில்லா பட்டதாரியின் தொடர்ச்சியாக 2 ஆம் பாகம் தயாரிக்க சவுந்தர்யா ரஜினிகாந்துடன் ஒத்துழைக்க இருப்பதாக தெரிவித்தார்.

இந்தப் படத்தில் என். ராமசாமியுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்பட இருந்தது. அதே நேரத்தில் படத்தின் ஸ்கிரிப்ட் எழுதப்பட வேண்டும். படத்தின் இசையமைப்பாளராக அனிருத்துக்கு பதிலாக சீன் ரோல்டன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.ஆனால் அனிருத் இசையமைத்த முதல் பாகத்தின் தீம் இசை புதிய படத்தில் தக்கவைத்துக் கொள்ளப்பட்டது.இந்த படத்திற்கான படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. அமலா பால், சமுத்திரகனி, விவேக், ரிஷிகேஷ் என முதல் படத்தின் பல நடிகர்கள் புதிய படத்திற்கு தக்கவைத்துக் கொள்ளப்பட்டனர்.முதல் படத்தில் இறந்த சரண்யாவும், இப்படத்தில் ஒரு பாத்திரத்தை சித்தரிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் திரைப்படத்தில் இந்தி திரைப்பட நடிகை கஜோல், ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்தார், இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு திரும்பினார். 2017 ஏப்ரல் மாதத்தில் படப்பிடிப்பு முடிவடைந்தது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வேலையில்லா_பட்டதாரி_2&oldid=37893" இருந்து மீள்விக்கப்பட்டது