திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்
படிமம்:திருவக்கரை ஆலயம்.jpg
பெயர்
புராண பெயர்(கள்):திருவக்கரை
பெயர்:திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருவக்கரை
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சந்திரசேகரேசுவரர், சந்திர மௌலீசுவரர்
தாயார்:அமிர்தேசுவரி, வடிவாம்பிகை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
தொன்மை:புராதனக்கோயில்

திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

கோயில் அமைப்பு

இந்தக் கோயிலில் இராசகோபுரம், கொடிமரமும், நந்தி, கருவறை ஆகியவை நேர் கோட்டில் இல்லாமல் ஒன்றைவிட்டு ஒன்று விலகியதாக வக்கிரமாக உள்ளன.[2] கருவறையில் உள்ள சிவலிங்கம் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் முகமுடைய மும்முகலிங்கமாகும். இங்குள்ள இறைவன் சந்திரசேகரன்; இறைவி வடிவாம்பிகை.

சிறப்புகள்

வக்கிரன் வழிபட்ட ஸ்தலம். வலிய கரை (சுற்றி கல் பாறைகள்) உள்ள இடம். வக்ரகாளியம்மன் சிறப்பு. பெருமாள் சந்நிதியும் உள்ளது. வராக நதி எனும் சங்கராபரணி நதியின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை.[3]

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 65

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்கள்