இக்கோயில் சிவகங்கை மாவட்டத்தில் தஞ்சாக்கூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது.இவ்வூரின் முந்தைய பெயர் ஆதிவில்வ வனம் என்பதாகும்.[2]
இறைவன், இறைவி
இக்கோயிலின் மூலவராக பரஞ்சோதி ஈசுவரர் உள்ளார். கோடி ருத்ரர்களும் இவரை வணங்கியதால் இவர் ருத்ரகோடீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இறைவி ஞானாம்பிகை ஆவார். மகாசிவராத்திரி, மார்கழி, திருவாதிரை உள்ளிட்ட பல விழாக்கள் இக்கோயில் நடைபெறுகின்றன.[2]
அமைப்பு
இந்திராணி, ராமர், லட்சுமனர், அனுமார், அகத்தியர், கௌதம முனிவர் உள்ளிட்ட பலர் இத்தல இறைவனை வணங்கியுள்ளனர். பொய்யாமொழிப் புலவர் தன் வறுமை நீங்க இங்குள்ள இறைவனை வழிபட்டுள்ளார். ஒரு முறை பிரம்மா, விஷ்ணு, இந்திரன் போன்றோர் சிவனிடம் சென்று தமக்கு இறைவனின் பரஞ்சோதி வடிவினைக் காட்ட வேண்டும் என்று கேட்க, அதற்கு சிவபெருமான் வில்வ வனத்தில் அருவ உருவமாக உள்ளதாகவும் அங்கு சென்று பூசித்தால் அவர்களது எண்ணம் பூர்த்தியாகும் என்றும் கூறினார் அதன்படி அவர்கள் வில்வ வனத்தைத் தேடி கண்டுபிடித்து இத்தலத்திற்கு வந்து சிவலிங்கத்தை அமைத்து வழிபட்டனர். இவர்களது நிலைப்பாட்டை சோதிக்க விரும்பிய இத்தல இறைவன், ஒரு தேவ கன்னி, மகாகாளி, வீரகாளி போன்றோரை அனுப்பிவைத்தார். ஒருமுறை தானே ஒரு முதியவர் வடிவில் வந்து இடையூறு செய்தபோதிலும் அவர்கள் அவற்றைப் பொருட்படுத்தாது வழிபாட்டினைத் தொடர்ந்தனர். இதனைக் கண்ட சிவன் ஆவணி மாத சோம வாரத்தில் அவர்களுக்குப் பரஞ்சோதி தரிசனம் தந்தார்.
[2]
மேற்கோள்கள்
↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009