கீழ்படப்பை விரட்டேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருள்மிகு விரட்டேசுவரர் கோவில்
Veeratteswarar Temple, Kil Padappai
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:காஞ்சிபுரம்
அமைவிடம்:சன்னதி தெரு, கீழ்படப்பை, திருப்பெரும்புதூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திருப்பெரும்புதூர்
மக்களவைத் தொகுதி:திருப்பெரும்புதூர்
கோயில் தகவல்
மூலவர்:விரட்டேசுவரர்.
தாயார்:சாந்த நாயகி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆருத்ரா, சிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:1000-2000 ஆண்டுகள்[2]

கீழ்படப்பை வீரட்டேசுவரர் கோயில் (Veeratteswarar Temple, Kil Padappai) இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்

இக்கோயில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் கீழ்படப்பை என்னுமிடத்தில் அமைந்துள்ளது. படப்பை என்றால் பூஞ்சோலை என்று பொருளாகும். பூக்கள் நிறைந்த சோலையில் இறைவர் இருப்பதால் இவ்விடம் படப்பை என்றழைக்கப்படுகிறது. இது உப வீரட்டத்தலமாகக் கருதப்படுகிறது. இத்தலம் வழியாக ஞானசம்பந்தர் விருத்தாச்சலம் சென்றபோது இவரை வணங்கி இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளதால் இத்தலம் தேவார வைப்புத்தலம் என்றும் பெருமையுடைய தலமாகும்.[3]

இறைவன், இறைவி

கோயிலின் மூலவர் வீரட்டேசுவரர் ஆவார். இவர் சதுர வடிவில் ஆவுடையாருடன் லிங்கத் திருமேனியாகக் காட்சியளிக்கிறார். இறைவி சாந்தவல்லி ஆவார். இக்கோயிலின் தல மரம் மாமரம் ஆகும். சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் திருநாவுக்கரசர் குரு பூசையும், ஆடி மாதம் சுவாமி நட்சத்திரத்தில் சுந்தரர் குரு பூசையும் இங்கு நடைபெறுகின்றன. சுந்தரர் வெள்ளை யானையில் கைலாசம் சென்றதால் விழாவின்போது யானை மீது வருவார். இவற்றுடன் கார்த்திகை, மகாசிவராத்திரி உள்ளிட்ட விழாக்களும் இங்கு கொண்டாடப்படுகின்றன.[3] காமிகாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் இங்கு நடக்கின்றன. மாசி மாதம் ஆருத்ராவும், சித்திரை மாதம் சிவராத்திரியும் முக்கிய திருவிழாவாக நடைபெறுகின்றன.

முன் மண்டபத்தில் இரு கைகளில் மலரை வைத்தபடி சந்திரனின் புடைப்புச் சிற்பம் உள்ளது. திருச்சுற்றில் தாமரை பீடத்தில் நவக்கிர மண்டபம் உள்ளது. இங்குள்ள விநாயகர் தாயின் பெயர் இணைந்த நிலையில் சாந்த விநாயகர் என்றழைக்கப்படுகிறார். விமானம் பத்ம விமான அமைப்பில் உள்ளது. அகோர வீரபத்திரர் வடக்கு நோக்கிய நிலையில் உள்ளார்.காளத்தீசுவரர், சனீசுவரர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். அம்பாள் தனி சன்னதியில் தெற்கு நோக்கிய நிலையில் உள்ளார். அவரது பாதத்தின்கீழ் ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டுள்ளது.[3]

வரலாறு

தட்சனின் பிள்ளைகளான கிருத்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 பேரை சந்திரன் மணந்தாலும் ரோகிணி மீது மட்டுமே அன்பு காட்டியதால் மற்றவர்களுக்கு வருத்தம் ஏற்பட்டது. இதனைப் பற்றி தம் தந்தையான தட்சனிடம் அவர்கள் எடுத்துக் கூறினர். தட்சன் சந்திரனின் கலைகள் தேயும்படி சாபமிட்டான். விமோசனம் தேடி சந்திரன் பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டான். அவ்வாறே இங்கும் ஒரு லிங்கத் திருமேனியை வைத்து வழிபட்டான்.[3]

மேற்கோள்கள்

  1. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  2. "கீழ்படப்பை வீரட்டேசுவரர் கோயில்". வலைத்தமிழ். https://www.valaitamil.com/shiva-temple-arulmigu-veerateshwarar-thirukoyil-t327.html. பார்த்த நாள்: 18 December 2022. 
  3. 3.0 3.1 3.2 3.3 அருள்மிகு வீரட்டேரீஸ்வரர் திருக்கோயில், தினமலர் கோயில்கள்

வெளியிணைப்புகள்