காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் (வீராட்டகாசம்)
படிமம்:Veerattakaasar Temple Kanchipuram.jpg
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் (வீராட்டகாசம்)
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வீராட்டகாசர்.

காஞ்சிபுரம் வீராட்டகாசர் கோயில் (வீராட்டகாசம்) என்று அறியப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும் . மேலும், சித்தர்கள் பலரும் இப்பெருமானை வழிபட்டு கிடைக்கற்கரிய சித்திகளைப் பெற்றுள்ளதும், திருமால் இப்பெருமானைப் பூசித்து தனக்கு பவளநிறத்தினைப் பெற்றுக்கொண்டதுமான இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது [1]

இறைவர், வழிபட்டோர்

தல வரலாறு

சங்கார காலத்தில் காலாக்னி ருத்ரர் நெற்றிக்கண் தீயினால் அனைத்தையும் அழித்தபோது, சிவபெருமான் ஆர்த்தெழுந்து வீரமாக பெருஞ்சிரிப்பு சிரித்தமையால் இத்தலம் வீராட்டகாசம் எனப்பட்டது. சாக்கிய நாயனார் கல்லெறிந்து வழிபட்டது இத்தலத்து மூர்த்தம் என்று சொல்லப்படுகிறது. (இத்தலத்தில் சாக்கிய நாயனார் கையில் கல்லுடன் உள்ள திருமேனி உள்ளது.)[2]

தல விளக்கம்

பஞ்ச திருமுகங்களைக் கொண்டுள்ள எம்பெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து அக்னி, வெளிப்பட்டு அண்டசராசரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியது. அந்த பிரளய காலத்திலும் அழியாது விளங்கும் காஞ்சிபுரத்தில் எழுந்தருளி ஆனந்த மிகுதியால் மென்மேலும் வீரநகையைச் செய்தார். ஆனால் அவ்விடம் வீராட்டகாசம் ஆனது.

கொங்கண முனிவர் தன்னிடம் அதிசயக் குளிகை ஒன்றை வைத்திருந்தார். அந்தக் குளிகையை எந்தப் பொருளின் மீது வைத்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பொருளைச் சாம்பலாக்கிவிடும். காஞ்சியிலே வீராட்ட காசத்திலே கோவில் கொண்டிருக்கும் இறைவன் பெருமையைக் கேள்விபட்ட கொங்கண முனிவர் காஞ்சி வந்து வீராட்டகாசத்திலே லிங்கத்தைக் கண்டு அதன் திருமுடிமேல் தன்னிடம் உள்ள குளிகையை வைத்தார். அடுத்தகணமே சிவலிங்கம் குளிகையைத் தன்னுள் மறைத்துக் கொண்டு விட்டது. இதனைக் கண்ட முனிவர் பெரிதும் வியந்து அப்பெருமானை வணங்கி, அவர் முன்னிலையில் தவம் செய்ய தொடங்கினார். சில நாளில் கொங்கண முனிவர் சிவன் திருவருளை அடைந்து தாம் விரும்பிய பயன்களைப் பெற்றார். அவரைப் போலவே பலர் அத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றார்கள். இத்தலத்து இறைவனைத் திருமால் வழிபட்டு பவள நிறம் பெற்றார்.[3]

அமைவிடம்

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடக்கு பகுதியில், (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) அப்பாராவ் முதலியார் தெருவில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் பிறவாத்தானம் கோவிலுக்கு வடகிழக்கே இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

  1. Project Madurai, 1998-2008 | 51. வீராட்டகாசப்படலம் 1692-1746
  2. tamilvu.org | காஞ்சிப் புராணப் படல அட்டவணை | வீராட்டகாசப் படலம் 499
  3. penmai.com| திருத்தல விளக்கம் | வீராட்டகாசம்
  4. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | (வீராட்டகாசம்) வீராட்டகாசர் திருக்கோவில்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.

புற இணைப்புகள்

வார்ப்புரு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்