இரும்பை மாகாளேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
மகாகாளேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருஇரும்பைமாகாளம்
பெயர்:மகாகாளேசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:இரும்பை
மாவட்டம்:விழுப்புரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மாகாளநாதர், மகாகாளேசுவரர்
தாயார்:குயில்மொழியம்மை, மதுரசுந்தர நாயகி
தல விருட்சம்:புன்னை
தீர்த்தம்:மாகாள தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
படிமம்:திருஇரும்பை மாகாளத்து தொன்மையான லிங்கம்.jpg
திருஇரும்பை மாகாளத்து தொன்மையான லிங்கம்

மகாகாளேசுவரர் கோயில் அல்லது திருவிரும்பை மாகாளம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில், இரும்பை எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். [1]

அமைவிடம்

திருஅரசிலியிலிந்து சில கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலம் இரும்பை. இரும்பை மாகாளேஸ்வரர் கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இங்கு சிவலிங்கத்தின் மேற்புறம் மூன்று பிளவுகளாக வெடித்து அவற்றில் ஒன்று விழுந்துவிட்டதால் அந்த இடம் வழித்தெடுத்தாற் போலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறப்பு

மகாகாளர், கடுவெளிச் சித்தர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.[2]

சம்பந்தர் பாடல்

இத் தலம் குறித்து சம்பந்தர் பாடிய பாடல்:

பூசுமாசில் பொடியான் விடையான் பொருப்பான்மகள்
கூச ஆனை உரித்த பெருமான் குறை வெண்மதி
ஈசன் எங்கள் இறைவன் னிடம்போய் இருப்பைதனுள்
மாசிலோர்கள் மலர்கொண்டு அணிகின்ற மாகாளமே. -சம்பந்தர்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 66

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்கள்