ஹீரோஷினி கோமலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹீரோஷினி கோமலி
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஹீரோஷினி கோமலி
பிறப்புபெயர் ஹிரோஷினி ராமகுடு கோமலி
பிறந்ததிகதி 15 ஏப்ரல் 1997
பிறந்தஇடம் கம்மம், ஐதராபாத், இந்தியா
பணி திரைப்பட நடிகை, விளம்பரப்பெண்
செயற்பட்ட ஆண்டுகள் 2016ம் ஆண்டு முதல்
செயற்பட்ட ஆண்டுகள் 2016ம் ஆண்டு முதல்

ஹிரோஷினி கோமலி, [[இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் கம்மத்தை சேர்ந்தவரும், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் இளம் நடிகையாவார். போலிக்குரல் கலைஞரான இவர், தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். மேலும் என்டிஆர்: கதைநாயகுடு (2019) மற்றும் காலங்களில் அவள் வசந்தம் (2022) போன்ற குறிப்பிடத்தகுந்த படங்களில் நடித்துள்ளார்.. [1]

திரைத்துறை வரலாறு

மாயவித்தைக்காரரான வசந்த் ராமடுகுவுக்கும், விஜயலட்சுமி என்பவருக்கும், கம்மத்தில் 1997 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிறந்தவரான ஹீரோஷினி, இவரது பதினான்காம் வயதிலேயே டிவி9 தெலுங்கு தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட நவ்வுலதா என்ற நகைச்சுவை நிகழ்ச்சிக்கு தொலைக்காட்சி தொகுப்பாளராக   தனது திரையுலக பாதையைத் தொடங்கியுள்ளார். அவர் தனது சகோதரி தேவர்ஷினியுடன் பிரபலமான தெலுங்கு திரைப்பட பிரபலங்களின் போலிக்குரல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பேசி, பங்கேற்பாளர்களை இவர் வசப்படுத்தியுள்ளார்,  மேலும் இவ்விருவரும் தெலுங்கு பொழுதுபோக்கு துறையில் "கோமலி சகோதரிகள்" என்று பரவலாக அறியப்பட்டுள்ளனர். ஹீரோஷினி தனது பள்ளிக் கல்வியை தனது சொந்த ஊரான கம்மத்தில் முடித்துள்ளார். மேலும்  தெலங்கானாவின் கம்மத்தில் உள்ள செயின்ட் மேரிஸ் கல்லூரியில் பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார். [2]

முறையாக நடிப்பதைப் பற்றியும் நடிப்புத்துறையை பற்றியும் தெரிந்து கொள்ள சத்யநாத்தின் கலைக்கூடத்தில் இணைந்த ஹீரோஷினி, வசனங்கள் மற்றும் ஒலிச் சேர்க்கை போன்றவற்றின் நுணுக்கங்களையும் . நிகழ்பதிவி கோணங்கள் மற்றும் நிகழ்பதிவி முன்நின்று எவ்வாறு உணர்ச்சிகளைக் காட்டுவது என்பது பற்றி கற்றுக்கொண்ட இவர், குணால் கிர் என்ற உடற்கலை நிபுணரின் ஸ்டீல் ஜிம்மில் சேர்ந்து உடலமைப்பையும் மெருகேற்றியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், போலிக்குரல் நிகழ்ச்சிகள் போன்றவைகளில் இருந்து மூன்று ஆண்டுகள் வரை விடுப்பு எடுத்து இதற்காக தயார்படுத்தியதாகவும் கூறியுள்ளார். [3] ஹீரோஷினி முதன்முதலாக, அ ஆ (2016) என்ற தெலுங்கு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் சகோதரியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். சங்கராபரணம் (2015) என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளராக இவரின் திறமையைக் கண்ட இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இப்படத்தில் இவருக்கு அந்த கதாபாத்திரத்தைக் கொடுத்துள்ளார். [2] 2019 ம் ஆண்டில், தெலுங்கு திரையுலகில் பிரபலமான என். டி. ராமராவ் ன் வாழ்க்கை வரலாற்றுப் படங்களான, க்ரிஷ் ஜகர்லமுடியின் என்.டி.ஆர்:மகாநாயக்குடு மற்றும் என்.டி.ஆர்:கத்தநாயக்குடு இரண்டிலுமே இவர், என். டி. ராமராவின் மகளான கண்டமனேனி உமா மகேஸ்வரியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. [4]

ஹீரோஷினி கதாநாயகியாக முதன்முதலில், புதுமுகம் ரோஷனுடன் தமிழ் திரைப்படமான உற்றான் (2020) என்ற அதிரடித் திரைப்படத்தில் நடித்துள்ளார், அதற்கு முன்பதாக காதல் நகைச்சுவையான காலங்களில் அவள் வசந்தம் (2022) என்ற படத்திலும் ஒரு முக்கிய வேடத்தை ஏற்று நடித்துள்ளார். [5] [6]

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி குறிப்புகள்
2016 ஏ ஆ நந்துவின் தங்கை தெலுங்கு
2019 என்டிஆர்: கத்தநாயகுடு கண்டமனேனி உமா மகேஸ்வரி தெலுங்கு
என்டிஆர்: மகாநாயக்குடு தெலுங்கு
2020 உற்றான் தமிழ்
2022 காலங்களில் அவள் வசந்தம் அனுராதா தமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஹீரோஷினி_கோமலி&oldid=23526" இருந்து மீள்விக்கப்பட்டது