ஹக்கீம் சையத் கலீபத்துல்லா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹக்கீம் சையத் கலீபத்துல்லா
The President, Shri Pranab Mukherjee presenting the Padma Shri Award to Prof. Hakim Syed Khaleefathullah, at an Investiture Ceremony-II, at Rashtrapati Bhavan, in New Delhi on April 26, 2014.jpg
ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, புது தில்லி இராட்டிரபதி பவனில் நடைப்பெற்ற விழாவில் பத்மஸ்ரீ விருது வழங்கும்போது நாள் 26 ஏப்ரல் 2014
பிறப்பு1938
சென்னை, இந்தியா
பணிஇந்திய மருத்துவர்
பிள்ளைகள்மரு. சையது அமீன், மரு சையது இக்பால் மற்றும் 3 புதல்விகள்
விருதுகள்பத்மஸ்ரீ

ஹக்கீம் சையத் கலீபத்துல்லா (Hakim Syed Khaleefathullah) என்பவர் ஒரு இந்திய மருத்துவர் மற்றும் நியாமத் மருத்துவ ஆய்வுகூடத்தின் நிறுவனர் ஆவார்,[1] யுனானியின் மாற்று மருந்து முறையில் நிபுணத்துவம் பெற்றவர்.[2] மருத்துவத் துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக, இந்திய அரசாங்கத்தால், 2014 ஆம் ஆண்டில், நான்காவது மிக உயர்ந்த இந்திய சிவில் விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.[3].

பிறப்பு

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 1938 ஆம் ஆண்டு சையத் கலீபத்துல்லா பிறந்தார். அவர் பாரம்பரிய முறையில் யுனானியைப் படித்தார், சென்னையில் தனது மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினார். 1985 ஆம் ஆண்டில், யுனானி மருத்துவ முறையை மேம்படுத்துவதற்காக புகழ்பெற்ற யுனானி மருத்துவர் டாக்டர் ஹக்கீம் சையத் நியாமத்துல்லாவின் நினைவாக ஒரு அரசு சாரா நிறுவனமான நியமாத் சயின்ஸ் அகாடமியை (நியாமத் மருத்துவ ஆய்வுகூடம்) நிறுவினார்.[4]

சையத் கலீபத்துல்லா யுனானி மருத்துவம் குறித்து பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நடந்த பல மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள், குணப்படுத்துவதற்கான கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளின் அணுகுமுறைகள் குறித்த சர்வதேச மாநாடு, 1985 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடத்தப்பட்டதிலும் பங்கேற்றுள்ளார். பாகிஸ்தானில் கராச்சியில் நடைபெற்ற சுகாதார மற்றும் நோய்களில் கூறுகள் குறித்த இரண்டாவது சர்வதேச மாநாடு 1987, இத்தாலியின் வெனிஸில் 1988 ஆம் ஆண்டில் உடல்நலம் மற்றும் நோய் குறித்த சர்வதேச ஆய்வரங்கம் மற்றும் 1993 இல் அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் ஆய்வரங்கம் ஆகியவை அவற்றில் சில.

கலீபத்துல்லா சென்னையில் வசிக்கிறார். அவரது மகன், மரு சையத் எம். எம். அமீன், தனது தந்தையினை தொடர்ந்து மருத்துவம் யுனானி மருத்துவத்தினை தொடர்கின்றார். மேலும் உள்நாட்டில் அறியப்பட்ட யுனானி மருத்துவரும் ஆவார்.

மேற்கோள்கள்