ஸ்மைலொடோன்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
| ஸ்மைலொடோன் | |
|---|---|
| ஸ்மைலொடோன் பேடாலிசு | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| துணைத்தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | பெலிடே
|
| பேரினம்: | ஸ்மைலொடோன்
|
| மாதிரி இனம் | |
| ஸ்மைலொடோன் பாப்புலேட்டர் | |
சிமைலொடோன் (Smilodon) என்பது முற்றிலும் அழிந்த ஒரு கொடுவாள் பூனையாகும். இவை பிலிசுடோசின் காலத்தில் வாழ்ந்து மறைந்தன.[1]
சிற்றினங்கள்
சிமைலொடோன் பேரினம் பின்வரும் சிற்றினங்களாக வகைப்படுத்தபட்டுள்ளது:
- சிமைலொடோன் பாப்புலேட்டர்
- சிமைலொடோன் பேடாலிசு
- சிமைலொடோன் கிரேசிலிசு

சிமைலொடோன் கிரேசிலிசு இந்த பேரினத்தில் முதலாவதாக தோன்றிய விலங்கினம் ஆகும். இவை எடையில் சிறியதாகவும், 5-25 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகவும், இயற்கையியலாளர்களால் கருதுகின்றனர்.
சிமைலொடோன் பாப்புலேட்டர் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த ஓரினமாகும். இவை, தற்போதைய தென் அமேரிக்க கண்டத்தில் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றின. 200-400 கிலோ எடைக்கொண்ட இவற்றின் மேல் தாடையின் கோரைப்பற்கள், 28 செமீ நீளமாகவும், கொடுவாள் போன்ற அமைப்பையும் கொண்டதாகும்.[1]
சிமைலொடோன் பேடாலிசு 16 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தற்போதைய லாஸ் ஏஞ்சலஸில் தோன்றிய இனமாகும். இவற்றின் தொன்ம படிமங்கள் லாஸ் ஏஞ்சலஸின் நிலப்பரப்புகளில் அதிகளவில் கிடைத்துள்ளன. எடையில் குறைந்தபட்சம் 200 கிலோவாக இருந்திருக்கும்.
கண்டறிதல்
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கையியலாளர் பீட்டர் வில்கம் லுண்ட் என்பவர் 1841-இல் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் உள்ள சிறு நகரின் குகையில் ஸ். பாப்புலேட்டர் சிற்றினக் கொடுவாள் பூனை ஒன்றின் தொல்படிமத்தை முதன் முதலாய்க் கண்டறிந்தார்.[1]
வேட்டையாடும் முறை
இவற்றின் முனங்கால்கள் நீளமாகவும் வலுவாகவும் இருந்ததால், இவை பாய்ந்து வேட்டையாடும் முறையை கையாண்டனர். இவை தம் வாயை 120 பாகைகள் (120°) திறந்து, தம் இரையின் கழுத்து பகுதியினை கடித்து, வேட்டையாடின.[2] இவற்றின் வேட்டை திறன் சிறுத்தைக்கு சமமானதாகும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இவை வேகமாக ஓடாவிட்டாலும், தம் பாய்ச்சல் திறனால் வேட்டையாடின.[2] இவற்றின் வால் சிறியதாக இருந்தன.
ஸ்மைலொடோன்களின் கோரைப்பற்களில் உள்ள கார்பன் மற்றும் ஆக்சிசனின் ஐசோடோப்புகளின் விகிதத்தை ஆய்வு செய்ததில், இவை வளர சராசரியாக 12-18 மாதங்கள் ஆகியிருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.[3]
தொல்சூழ்நிலையியல்
இவை கம்பளி யானை, குதிரை, ஒட்டகம், அசையாக்கரடி, இரட்டைப்படைக் குளம்பிகள், இலாமாக்கள், காட்டுப் பன்றிகள், அலிகேட்டர், மான், தும்பிப்பன்றி, காட்டெருது போன்ற இதர வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்குகளைக் கொன்று தின்னதாக நம்பப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Antón, Mauricio (2013-11-22). Sabertooth (in ஆங்கிலம்). Indiana University Press. ISBN 978-0-253-01049-0.
- ↑ 2.0 2.1 Martin, L.D. (1980). Functional morphology and the evolution of cats. Transactions of the Nebraska Academy of Sciences. pp. 141–154.
- ↑ Feranec, Robert (2005-12-31). "Growth Rate and Duration of Growth in the Adult Canine of Smilodon gracilis and Inferences on Diet Through Stable Isotope Analysis" (in en). Bulletin of the Florida Museum of Natural History 45 (4): 369–378. doi:10.58782/flmnh.psyo5090. பன்னாட்டுத் தர தொடர் எண்:2373-9991. https://flmnhbulletin.com/index.php/flmnh/article/view/flmnh-vol45-no4-pp369-378.
- Antón, M. (2013). Sabertooth (1st ed.). Bloomington: Indiana University Press. ISBN 978-0-253-01042-1. கணினி நூலகம் 857070029.