வெற்றிமணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வெற்றிமணி
1970 நவம்பர் 15 வெற்றிமணி இதழ் அட்டை
இதழாசிரியர்மு. க. சுப்பிரமணியம்
வகைசிறுவர் இதழ்
இடைவெளிமாதமொரு முறை
வெளியீட்டாளர்சக்தி அச்சகம்
தொடங்கப்பட்ட ஆண்டு1950
முதல் வெளியீடு1950
கடைசி வெளியீடு1979
நாடுஇலங்கை
மொழிதமிழ்

வெற்றிமணி என்பது இலங்கையில் 1950 முதல் ஏறத்தாழ 30 ஆண்டுகளாக வெளிவந்த ஒரு சிறுவர் இதழ் ஆகும். இவ்விதழ் மு. க. சுப்பிரமணியம் என்பவரால் 1950 ஆம் ஆண்டில் நாவலப்பிட்டியில் இருந்து வெளியானது.[1]

வரலாறு

வெற்றிமணி சிறுவர் இதல் 1950 முதல் மலையக நகரான நாவலப்பிட்டியில் ஆசிரியராகப் பணியாற்றிய மு. க. சுப்பிரமணியம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. 1958 முதல் க. வே. மகேந்திரன் என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பூண்டுலோயாவில் இருந்து வெளிவந்தது. பின்னர் பொ. இராசரத்தினம் என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு முல்லைத்தீவு, தண்ணீரூற்று என்ற கிராமத்தில் இருந்து சக்தி அச்சகம் என்ற சொந்த அச்சகத்தில் இருந்து வெளிவந்தது.[1]

1968 ஆம் ஆண்டில் மு. க. சுப்பிரமணியம் குரும்பசிட்டி பொன். பரமானந்தர் வித்தியாலய அதிபராக பதவி உயர்வு பெற்று சென்ற பின்னர், சக்தி அச்சகம் யாழ்ப்பாணம், யாழ்ப்பாணத்திலுள்ள ஸ்ரான்லி வீதிக்கு இடம் மாறியது. வெற்றிமணி பத்திரிகையும் யாழ்நகரில் இருந்து வெளிவரத் தொடங்கியது. இறுதியாக, சக்தி அச்சகம் 1972 இல் சுன்னாகத்திற்கு இடம் மாறியதை அடுத்து 1979 வரை அங்கிருந்து வெளிவந்தது. மு. க. சுப்பிரமணியம் 1980 இல் காலமானதை அடுத்து வெற்றிமணியும் நின்று போனது.[1]

வெற்றிமணி வெளியீடுகள்

  • கணக்கியலுக்கோர் அறிமுகம் (வை. சி. சிவஞானம்)
  • பரீட்சையில் சித்தியடைவது எப்படி? (கவிஞர் வி. கந்தவனம்)
  • கீரிமலையினிலே (இரசிகமணி. கனக செந்திநாதன்)
  • உங்களைப் பற்றி (டாக்டர் நந்தி - சிவஞானசுந்தரம்)

வெற்றிமணியின் தொடர்ச்சி

  • வெற்றிமணி 2005 ஆம் ஆண்டு முதல் மாணவர் இதழாக காலாண்டிற்கு ஒருமுறை யாழ்ப்பாணத்தில் இருந்து இலவசமாக வெளிவருகிறது.[1][2]
  • வெற்றிமணி ஜனரஞ்சக இதழாக மாதமொரு முறை 1990களில் இருந்து செருமனியில் இருந்து வெளிவருகிறது. வெற்றிமணி சிறுவர் இதழின் நிறுவனர் மு. க. சுப்பிரமணியத்தின் மகன் மு. க. சு. சிவகுமாரன் இதன் ஆசிரியராக உள்ளார்.

சில இதழ்கள்

Noolagam logo.jpg
தளத்தில்
வெற்றிமணி
இதழ்கள் உள்ளன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=வெற்றிமணி&oldid=15474" இருந்து மீள்விக்கப்பட்டது