விவியன் பாலகிருஷ்ணன்
விவியன் பாலகிருஷ்ணன் | |
---|---|
விவியன் பாலகிருஷ்ணன் | |
தாய்மொழியில் பெயர் | விவியன் பாலகிருஷ்ணன் |
பிறப்பு | 25 சனவரி 1961 சிங்கப்பூர் |
தேசியம் | சிங்கப்பூர் வாசி |
முன்னிருந்தவர் | கா. சண்முகம் |
அரசியல் கட்சி | மக்கள் செயல் கட்சி |
சமயம் | கிறிஸ்தவம்[1] |
வாழ்க்கைத் துணை | ஜாய் பாலகிருஷ்ணன் |
பிள்ளைகள் | 4 |
விவியன் பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan: 1961, ஜனவரி 25) இவர் மருத்துவராகவும், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும், ஆளும் மக்கள் செயல் கட்சி (PAP) உறுப்பினராகவும் உள்ளார். இவர் திறன் மிகு நாடு திட்டத்தின் அமைச்சராகவும் உள்ளார்.[2] இவர் சிங்கப்பூர் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வழங்கல் துறை அமைச்சர் , சமூக அபிவிருத்தி, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, தகவல், தொடர்பு மற்றும் கலை , மற்றும் வர்த்தக மற்றும் தொழிற்துறை போன்ற துறைகளுக்கான அமைச்சராக பணி புரிந்துள்ளார். 2002 ஆம் ஆண்டில், பாலகிருஷ்ணன் தேசிய அபிவிருத்தி அமைச்சகத்தில் ஒரு மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும் சிங்கப்பூர் சீரமைப்புக் குழுவின் தலைவரும் ஆவார். இவர் 2004 முதல் 2008 வரை இளம் ஆளும் மக்கள் செயல் கட்சியின் இளைஞர் அணியின் தலைவராக உள்ளார். இவர் ஹாலந்து - புக்கிட் திமா குழுவின் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
பாலகிருஷ்ணன் சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தில் ஒரு உதவித்தொகையின் மூலம் மருத்துவப் படிப்பை படித்தார். பின்னர் இவர் முதுகலைக் கல்வியில் கண் மருத்துவம் தொடர்ந்தார். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தலைமை நிர்வாகியாக இருந்தார். சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் இரண்டாம் காம்பாட் துணை மருத்துவமனையின் தலைமை அதிகாரியாக பணியாற்றினார்.
ஆரம்ப வாழ்க்கை
பாலகிருஷ்ணன் ஒரு 1961 ல் புஜியான் என்ற இடத்தில் பிறந்தார் இவரது தந்தை இலங்கைத் தமிழர் தாய் புஜியான் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்.[3][4] இவர் ஆரம்பக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியையும் ஆங்கிலோ-சீனப் பள்ளியில் பயின்றார். 1980 ஆம் ஆண்டு தேசிய இளைஞர் ஜூனியர் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, இவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க உதவித்தொகை பெற்றார்.
மருத்துவ வாழ்க்கை
1993 முதல் 1995 வரை, பாலகிருஷ்ணன் இலண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் சிறப்பு மூத்த பதிவாளராக பணிபுரிந்தார். அங்கு இவர் குழந்தை கண் மருத்துவத்தில் துணை மருத்துவராக பணிபுரிந்தார். பின்னர் சிங்கப்பூர் திரும்பினார். அங்கு இவர் சிங்கப்பூர் தேசிய கண் மையம் மற்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் கண் மருத்துவராக நியமிக்கப்பட்டார். 1998 இல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் கண் மருத்துவத்தின் பேராசிரியராக இருந்தார். 1999 ஆம் ஆண்டில், சிங்கப்பூர் தேசிய கண் மையத்தின் மருத்துவ இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தேசிய மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரி ஆனார்.[5] 1990 களில், சிங்கப்பூர் தொலைக்காட்சியில் உடல்நலத்தைப் பற்றி ஒரு தொடரை வழங்கினார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் ஜாய் என்பவரை மணந்தார் [7] இவர்களுக்கு ஒரு மகளும் மூன்று மகன்களும் உள்ளனர்.[8]
குறிப்புகள்
- ↑ "Facebook – Vivian Balakrishnan". http://www.facebook.com/Vivian.Balakrishnan.Sg?sk=info. பார்த்த நாள்: 11 March 2012.
- ↑ "Smart Nation an opportunity to ‘shift tone of society’: Vivian Balakrishnan" (in en-GB). Channel NewsAsia இம் மூலத்தில் இருந்து 2017-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170821132559/http://www.channelnewsasia.com/news/singapore/smart-nation-an-opportunity-to--shift-tone-of-society--vivian-ba-8258984.
- ↑ http://www.rediff.com/news/report/coming-to-india-is-like-coming-home/20100111.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-08-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170809171657/https://www.allamericanspeakers.com/celebritytalentbios/Dr.-Vivian-Balakrishnan.
- ↑ "About Vivian Balakrishnan – Vivian Balakrishnan". Vivian.balakrishnan.sg. 22 June 2011 இம் மூலத்தில் இருந்து 2011-07-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110729082044/http://vivian.balakrishnan.sg/pages/about-vivian-balakrishnan. பார்த்த நாள்: 2011-07-10.
- ↑ "Dr Vivian BALAKRISHNAN" (in en). 2014-10-20. http://www.pmo.gov.sg/cabinet/dr-vivian-balakrishnan.
- ↑ "Two former First Ladies attend Girl Guides event". AsiaOne. http://www.asiaone.com/singapore/two-former-first-ladies-attend-girl-guides-event.
- ↑ Chew, Hui Min (2016-01-01). "Foreign Minister Vivian Balakrishnan is now a grandpa, possibly the youngest in Cabinet" (in en). The Straits Times. http://www.straitstimes.com/politics/foreign-minister-vivian-balakrishnan-is-now-a-grandpa-possibly-the-youngest-in-cabinet.