விளாப்பாக்கம்
விளப்பாக்கம் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
வட்டம் | ஆற்காடு |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
8,174 (2011[update]) • 1,635/km2 (4,235/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/vilapakkam |
விளப்பாக்கம் (ஆங்கிலம்:Vilapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
விளப்பாக்கம் பேரூராட்சி வேலூருக்கு கிழக்கில் 28 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் கலவை 18 கிமீ; வடக்கில் ஆற்காடு 8 கிமீ; தெற்கில் திமிரி 3 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 25 கிமீ தொலைவில் உள்ள அம்மூர் ஆகும்.
பேரூராட்சியின் அமைப்பு
5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 59 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,941 வீடுகளும், 8,174 மக்கள்தொகையும், கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.36%, பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ விளப்பாக்கம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vilapakkam Population Census 2011