வில்லிபாரதம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வில்லிபாரதம் வில்லிபுத்தூரார் தமிழில் பாடிய மகாபாரதம் ஆகும்.

வில்லிபாரதம் உருவான கதை

வில்லி பாரதம் முன்னுரை வில்லிபாரதம் நூலாசிரியர் குறிஞ்சிகாப்பிய அமைப்பு கிருட்டிணன் தூது முதல் நாள் தூது இரண்டாம் நாள் தூது மூன்றாம் நாள் தூது நான்காம் நாள் தூது தூதில் இடம் பெறும் பாத்திரங்கள் காப்பியச் சிறப்பு கிளைக் கதைகள் அணி நலன்கள் வருணனை வில்லிபாரதமும் பிறவும் தமிழ் இலக்கிய வரலாறும் பாரதமும் இராமாயணமும் வில்லிபாரதமும் தொகுப்புரை கேள்வி பதில்கள் இப்பகுதி என்ன சொல்கிறது? இப்பகுதி பாரதம் என்றால் என்ன என்பதைக் குறிப்பிடுகிறது. தமிழிலக்கியத்தில் பாரத நூல்கள் பற்றிய விளக்கங்களைக் கூறுகின்றது. குறவர்வில்லிபுத்தூரார் பற்றிய வரலாற்றையும், வில்லிபாரதத்தின் கதையமைப்பு, வருணனை பற்றிய விளக்கத்தையும் கூறுகிறது. தனிவாழ்விலும் பொதுநிகழ்வுகளிலும் தூதுவிடுத்தல் பற்றிய குறிப்பினையும் பாண்டவர்கள் சார்பாகக் கிருட்டிணன் தூது சென்றதன் விளைவு பற்றியும் எடுத்துரைக்கிறது.

இதைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? • தமிழில் பாரதக் கதையைச் சொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பற்றி அறியலாம்.

• தனி மனித ஒழுக்கத்தின் இழிவு, மேன்மை பற்றித் தெரிந்து கொள்ளலாம். உலகில் அழிவைத் தரும் போருக்கு அடிப்படைக் காரணங்களுள் ஒன்று மண்ணாசை என்பதை எடுத்துச்சொல்லலாம்.

• கண்ணனின் இளம்பருவ விளையாடல்கள், வீரச்செயல்கள் பற்றி அறியலாம். தருமத்தின் முன் அதர்மம் அழியும் என்பதனை விளங்கிக் கொள்ளலாம்.

முன்னுரை

பாரதம் என்னும் சொல்லுக்கு - பரதனது வம்சத்தவரைப் பற்றிய நூல் என்று பொருள். இந்தப் பரதன் சந்திரவம்சத்தில் துஷ்யந்த மகாராசனுக்குச் சகுந்தலையினிடந்தோன்றிப் புகழ் பெற்ற குறவர்வில்லிஅரசன். பரத வம்சத்தைச் சேர்ந்த பாண்டவர், துரியோதனன் ஆகியோரைப் பற்றியும் அவர்களைச் சார்ந்தவர்களைப் பற்றியும் உணர்த்தும் நூல் பாரதம் எனப்பட்டது. நான்கு வேதங்களுக்குச் சமமாக ஐந்தாம் வேதம் என இந்நூல் போற்றப்பட்டது. அனைவராலும் வழிபடத்தக்க மேம்பாட்டை உடையதாயிருத்தலால், இந்த இதிகாசம், 'மகா' எனும் அடைமொழி கொடுக்கப்பட்டு, மகாபாரதம் எனவும் வழங்கும். இந்நூலை முதலில் செய்த வேத வியாசமுனிவரால் வைக்கப்பட்ட 'பாரதம்' என்கிற பெயரே, வழிநூலாகிய இத்தமிழ் நூலுக்கும் பெயராயிற்று. எனவே வில்லிபாரதம் ஒரு வழிநூல்.

வில்லிபாரதத்தில் உலூகன் தூது, கிருட்டிணன் தூது, சஞ்சயன் தூது என்னும் மூன்று தூதுச்சருக்கங்கள் உள்ளன. இவற்றில் உலூகன் தூதும், கிருட்டிணன் தூதும் பாண்டவர் சார்பாக நூற்றுவர்பால் அனுப்பப் பெற்றவை. சஞ்சயன் தூது திருதராட்டிரனால் பாண்டவர்பால் விடுக்கப்பெற்றது. கிருட்டிணன் தூது 264 பாடல்களால் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. காப்பியத்தின் உயிர்ப்பகுதியாகக் கிருட்டிணன் தூது அமைகிறது. முதலில் அண்ணன் தம்பி பூசலாக உருவானது; பிறகு பாண்டவர், கெளரவர் மானப்பிரச்சினையாக ஆனது; அதற்குப்பிறகு அரசியல் பிரச்சினையாக வளர்ந்தது. இவ்வாறு ஒரே காப்பியத்தின் கருவானது மூன்று நிலைகளில் நிற்பதால் தான், பாரதம் என்றென்றும் சுவை மிக்க காப்பியமாக விளங்கிவருகிறது.

பாரதத்தின் தொடக்கத்தில் கெளரவ, பாண்டவரின் முன்னோர் வரலாற்றையும் இன்றியமையாத மாந்தர்களின் பிறப்பு நிலையினைப் பற்றியும் விவரித்துப் பங்காளிகளின் பொறாமையே பாரதப் போருக்கான வித்தாகிறது என்பது கூறப்படுகிறது. பாண்டவர்க்கமைந்த நாட்டினைக் கெளரவர் கைக்கொள்ள நினைக்கும் எண்ணமே அந்தப் பொறாமை வளர்வதற்கு உரமாக அமைகிறது. தலைவன் துரியோதனன், பாண்டவரின் வலிமை மிக்க வீமனை அழிக்க முடிவுசெய்தல், அரக்கு மாளிகையில் அனைவரையும் அழிக்க முயலுதல், இராஜசூய யாகத்தின் மூலமாகக் கண்ணனுக்குப் பெருமை சேர்த்து, கௌரவர்களைப் பாண்டவர் பழித்தல், மோதல் இல்லாமல் சூது போரால் நூற்றுவர் வெற்றிகொள்ளல், பாஞ்சாலி துகிலுரிதல் - அப்போது கண்ணன் திரெளபதிக்கு உதவுதல், அரசிழந்த பாண்டவர்களின் நிலை எனக் கதை நீண்டு செல்லும் போக்கினைத் தொடர்ந்து, பகையில் அழிவு நேராமல் இருக்க, பாண்டவர் விடுத்த தூதுச் செயல்கள், போர்ச்செயலை நோக்கி விரைவு படுத்தவே உதவுகின்றன. கண்ணன் தூது சென்று ஆற்றிய செயல்கள் கௌரவர்களின் முழு வலிமையைக் குலைத்தன. இறுதியில் போர் மூண்டு துரியோதனன் வீழ்த்தப் பட்டான். தருமன் அரசனானான். கண்ணன் தூது மேற்கொண்டதும், அப்பணியை எவ்வாறு திறம்பட முடித்தான் என்பதும் இப்பாடப் பகுதியில் விளக்கப் பெறுகின்றன.

வில்லிபாரதம்

தமிழில் அதிகமான கலந்து வரும் நூலாக வில்லி பாரதம் காணப்படுகிறது. சுருங்கச் சொல்லல், விளங்கவைத்தல், ஓசையுடைமை, ஆழமுடைத்தாதல் முதலிய நூலழகுகள் இந்நூலில் அமைந்துள்ளன. ஆழ்வார்களுடைய சொற்களும், பொருள் கருத்துகளும் சிற்சில இடங்களில் எடுத்தாளப்பட்டுள்ளன.

பொ.ஊ. 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குறவர்வில்லிபுத்தூரார் இயற்றிய பெருங்காப்பியம் வில்லி பாரதம். வியாசரை முதல் நூலாசிரியராகக் கொண்ட குறவர்வில்லிபுத்தூரார் தமக்குமுன் வழங்கிய சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், பாரத வெண்பா, மக்களிடையே வழங்கிய பாரதம், கிளைக்கதைகள், நாட்டுப் பாடல்கள், பழமொழிகள் ஆகியவற்றை மனத்தில் கொண்டு தமது நூலைப் பாடினார்.

நல்லாப்பிள்ளை பாரதம்

குறவர்வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்திலே சுருக்கமாகக் கதையைத் தொகுத்துக் கூறும் 300, 400 பாடல்கள் தவிர, மற்றைய நாலாயிரஞ் செய்யுட்களை எடுத்துக்கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை என்பவர், புதிதாகத் தாம் 11 ஆயிரம் பாடல்கள் பாடி, இடையிடையிற்கோத்தும் இறுதியில் சேர்த்தும் பாரதம் 18 பருவங்களையும் பூர்த்தி செய்தார்; அது நல்லாப்பிள்ளை பாரதம் என வழங்கப்படுகிறது.

நூலாசிரியர்

திருமுனைப்பாடி நாட்டில் வக்கபாகையென்னும் இராசதானியில் கல்வி, அறிவு, செல்வம், அதிகாரங்களில் குறைவின்றி ஆட்சி செலுத்தி வந்தவன் வரபதியாட் கொண்டான். கல்வி, கேள்வித்திறமைகளையும், அடக்கம், அன்பு, ஒழுக்கம் முதலிய நற்குணங்களையும் கொண்ட குறவர்வில்லிபுத்தூராரின் ஆற்றலைக் கேள்வியுற்ற அம்மன்னன் அவரை அழைத்துத் தனது அவைப் புலவராக்கினான். தனது சமஸ்தானத்துக்கு, உலகம் உள்ளவரைக்கும் அழியாத பெருமை உண்டாகும்படி,வேத வியாசர் எழுதிய மகாபாரதத்தைத் தமிழில் எழுதும்படி வேண்ட, அவ்வாறே குறிஞ்சி குறவர் வில்லிபுத்தூரார் பாடினார்.

குறவர்வில்லிபுத்தூரார் திருமுனைப் பாடி நாட்டில் சனியூரில் வீரராகவாச்சாரியாருக்கு மகனாக அவதரித்தவர், வைணவ மதம் சார்ந்த அந்தணர் என்னும் செய்திகள் நூலின் சிறப்புப் பாயிரத்தின் மூலம் அறியமுடிகிறது. தன்னை ஆதரித்த வரபதியாட்கொண்டானை இந்நூலின் இடையிடையே புகழ்ந்து பேசியுள்ளார். இவர் மகாபாரதம் தவிர வேறு நூல் எதுவும் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. பிற்காலத்தவர் இவரை 'குறவர்வில்லிபுத்தூராழ்வார்' என்றே குறிப்பிட்டனர். இவருடைய காலம் ஏறக்குறைய 16ஆம் நூற்றாண்டு ஆகும். திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரிநாதருடைய சம காலத்தவர் குறவர்வில்லிபுத்தூரார் என்றும் கூறப்படுகிறது.

நூலாசிரியர் பற்றிய கதை

குறவர்வில்லிபுத்தூரார்க்கும் இவர் தம்பியர்க்கும் தாய் பாகத்தைப் (பரம்பரைச் சொத்துரிமை) பற்றி விவாதமுண்டாக, அவ்விஷயத்தை அவர்கள் அரசனிடம் கொண்டு சென்றனர்; குறிஞ்சி அரசன் இவரது கல்வித் திறத்தை கேள்வியுற்று அறிந்தவனாதலால், 'இவ்வளவு கற்றறிந்தவர்க்கும் உண்மையறிவு உண்டாகவில்லையே! என்று வருத்தமடைந்து அவ்வுண்மையறிவை இவர்க்கு உண்டாக்குவதற்கு ஏற்ற உபாயம் மகாபாரத நூலைப் பயிலும் படி செய்வதே' என்று உறுதிசெய்து, 'மகாபாரதத்தை நீர் தமிழில் பாடவேண்டும்; பாடின பின்பு தான் உங்கள் வழக்குத் தீர்க்கப்படும்' என்று கட்டளையிட்டான்; உடனே இவர் அவ்வாறே அப்பாரதத்தைப் பாடி, அந்நூலின் நீதியின் கருத்தூன்றியவராய், பின்பு தாமே தம் பங்கை தம்பியர்க்கே கொடுத்துவிட்டார் என்றும் இவரைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது.

இதர விவரங்கள்

வில்லிபாரதம், வியாசர் எழுதிய மகாபாரத நூலைத் தழுவியது. எனினும்,பாரதத்தின் முற்பகுதியை மட்டுமே குறவர்வில்லிபுத்தூரார் தமிழில் எழுதியுள்ளார். மிகப் பெரிய நூலான மகாபாரதத்தைச் சுருக்கிப் பத்து பருவங்களில் 4351 பாடல்களில் தந்துள்ளார். வியாச பாரதத்தில் முக்கிய உறுப்புகளில் ஒன்றான பகவத்கீதை வில்லிபாரதத்தில் உள்ளடக்கப்படவில்லை. வில்லிபாரதம் பெருமளவு சமஸ்கிருதக் கலப்புக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

குறிஞ்சி:

"https://tamilar.wiki/index.php?title=வில்லிபாரதம்&oldid=12995" இருந்து மீள்விக்கப்பட்டது