விசாகா ஹரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
விசாகா ஹரி
Visakha Hari.jpg
விசாகா ஹரி 2016ல் பெங்களூரில் நடந்த இசை நிகழ்ச்சியில்.
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1981 மே 21
சென்னை, இந்தியா
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்இந்திய பாரம்பரிய இசை
தொழில்(கள்)ஹரிகதா கலாட்சேப நிபுணர்

விசாகா ஹரி இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த இசைக் கலைஞர். லால்குடி ஜெயராமனின் சீடரான இவர் இறைக் கதை சொல்லுதல் (கதாகாலசேபம்) எனும் பழங்கலையைப் பாவித்து வரும் கலைஞர். இது மட்டுமின்றி விசாகா ஹரி பட்டயக் கணக்கறிஞர் பணியும் ஆற்றி வருகிறார். இவருடைய கணவர் ஹரியும் ஒரு பாகவதக்கதை சொல்லி ஆவார்.

இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய பெண் கலைஞர்களில் ஏழு பேரில் ஒருவராவார், இவரது குறிப்பிடத்தக்க திறமைக்காக 2012 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது, மற்றும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது ஆகியவை வழங்கப்பட்டது. இவரது இசை குரு லால்குடி ஜெயராமனின் கைகளிலிருந்து வசந்தசிரேஷ்டாவும், 'வுமன் பார் எக்ஸலன்ஸ்' விருதும் பெற்றுள்ளார். [1]

ஆரம்ப நாட்கள்

புகழ்பெற்ற கர்நாடக வயலின் கலைஞரான பத்ம விபூசண் சிறீ லால்குடி ஜெயராமனின் கீழ் விசாகா கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார். இவரது ஆன்மீக குரு மற்றும் மாமனார் கிருட்டிண பிரேமி என்பவராவார். [2][3]இவர் தனது கணவர் ஹரியிடமிருந்து ஹரிகதை கலையை கற்றுக்கொண்டார். அனுபவம் வாய்ந்த ஹரிகதை நிபுணரான இவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் சொற்பொழிவுகளை வழங்குகிறார்.

இசை வாழ்க்கை

விசாகா ஹரி 2006 முதல் சென்னை, டிசம்பர் இசை விழாக் காலங்களில் பல சபாக்களில் தனது நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். விசாகா ஹரி தனது கணவர் ஹரியுடன் (பரணூர் மகாத்மா கிருட்டிண பிரேமியின் மகன்) இணைந்து இவரது கதாகலாட்சேப நிகழ்ச்சிகளுக்கு கூடுதலாக அவ்வப்போது தனது ஆங்கில இலக்கிய பின்னணியைப் பயன்படுத்துகிறார். இவரது சகோதரர், லால்குடி ஜெயராமனின் சீடரான சாகேதராமன், இந்தியாவின் முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்களில் ஒருவராவார். அகில இந்திய வானொலியின் கலைஞரான இவர் வெளிநாடுகளில் சொற்பொழிவுகளையும் இசை நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார்.

விசாகா ஹரி பிரபல நடனக் கலைஞர் பேராசிரியர் சுதாராணி ரகுபதியிடமிருந்து பரதநாட்டியத்தைக் கற்றுக்கொண்டார். திருமதி. விசாகா இராமாயணம், பாகவதம் மற்றும் கந்த புராணம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாகா பல்வேறு தலைப்புகளில் ஹரிகதையை நிகழ்த்துகிறார். கிருட்டிண பிரேமியின் படைப்புகளிலிருந்தும் இவர் நிகழ்ச்சிகளை நிகழ்த்துகிறார்: சிறீவைஷ்ணவ சம்கிதம்; சிறீபிருந்தாவன மகாத்மியம்; திவ்ய தேச வைபவம்; ஹரிகதா அமிர்தா லகரி; சிறீபக்தபுருச ஸ்தவம்; சதி விஜயம், சதகம் மற்றும் கீர்த்தனைகள் போன்றவை.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

ஹரிகதை மற்றும் கர்நாடக இசைத் துறைகளில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இவர் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது இசை குரு லால்குடி ஜெயராமன் மற்றும் தியாகராஜர் ஆகியோரின் கைகளிலிருந்து "வுமன் பார் எக்ஸலன்ஸ்" என்றப் பட்டம் பெற்றார். பிரதித்வனி அல்லது இவரது ஆன்மீக குரு மற்றும் மாமனார் கிருட்டிண பிரேமியிடமிருந்து 'தியாகராஜ சுவாமியின் எதிரொலி' என்றப் பட்டம் பெற்றார். [4]

மும்பை சிறீசண்முகானந்தா நுண்கலை மற்றும் சங்கீத சபையில் 2016 செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற ஒரு விழாவில் திருமதி ம. ச. சுப்புலட்சுமி நூற்றாண்டு விருது வழங்கப்பட்டது. இந்தப் பரிசைப் பெற்ற இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய பெண் கலைஞர்களில் ஏழு பேரில் இவரும் ஒருவர் ஆவார். [5] 2016 நவம்பர் 20 அன்று, சென்னை பாரதிய வித்யா பவன், இன்போசிஸின் தலைவர், ஆர். சேசசாயி என்பவரால் 'வாழ்நாள் சாதனையாளர்' விருதுடன் திருமதி விசாகா ஹரி பாராட்டப்பட்டார். [6]

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=விசாகா_ஹரி&oldid=7548" இருந்து மீள்விக்கப்பட்டது