வி. மதுசூதனன் நாயர்
வி.மதுசூதனன் நாயர் (ஆங்கிலம்: V. Madhusoodanan Nair) ஓர் இந்திய கவிஞரும் மலையாள இலக்கிய விமர்சகருமான இவர், கவிதைகளை பாராயணம் செய்வதன் மூலம் பிரபலப்படுத்திய பங்களிப்புகளைப் பெற்றவர்.[1] மலையாள இலக்கியத்தில் அதிக எண்ணிக்கையிலான பதிப்புகள் கொண்ட கவிதைகள், இவரது சொந்த கவிதைகள் மற்றும் பிற முக்கிய கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்ற இசை தொகுப்புகளுக்காக இவர் மிகவும் பிரபலமானவர். கேரள சாகித்ய அகாதமி 1993 ஆம் ஆண்டில் கவிதைக்கான இவர்களின் வருடாந்திர விருதை இவருக்கு வழங்கி கௌரவித்தது. சாகித்ய அகாடமி விருது, ஆசான் சுமாரக கவிதா புரஸ்காரம், பத்மபிரப இலக்கிய விருது, குஞ்சு பிள்ளை விருது, ஆர். ஜி. மங்களம் விருது, சௌபர்னிகாதீரம் பிரத்திபா புரஸ்காரம் உள்ளிட்ட பல கௌரவங்களையும் இவர் பெற்றுள்ளார்.
சுயசரிதை
வி. மதுசூதனன் நாயர் பிப்ரவரி 25, 1949 அன்று தென்னிந்திய மாநிலமான கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் நெய்யாற்றிங்கரைக்கு அருகில் உள்ள சிறிய நதிக்கரை கிராமமான அருவியோடு என்ற இடத்தில் வேலாயுதன் பிள்ளை, கௌரிகுட்டி அம்மா ஆகியோருக்கு பிறந்தார்.[2] தோற்றம் பாட்டு என்ற பாட்டுவகையை படிப்பவராக இருந்த இவரது தந்தையிடமிருந்து பல சடங்கு பாடல்களின் பாரம்பரியத்தை இவர் ஆரம்பத்தில் பின்பற்றினார். இவரது ஆரம்பகால பள்ளிப்படிப்பு நெய்யாற்றிங்கரையிலும், கோட்டூர்கோணத்தில் உள்ள உள்ளூர் பள்ளிகளில் இருந்தது. அதன் பிறகு வேலுத் தம்பி நினைவு நாயர் சேவை சங்கத்தின் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று, திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் ஒரு பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். குங்குமம் வார இதழ், வீக்சனம் தினசரி இதழ் ஆகியவற்றில் பணியாற்றினார். மேலும் கேரள பாஷா நிறுவனத்தில் துணை ஆசிரியராக பணியாற்றுவதற்கு முன்பு திருவனந்தபுரம் அகில இந்திய வானொலியின் நிலையத்தில் திட்ட அறிவிப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர், திருவனந்தபுரம் புனித சேவியர் கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்து கல்வியாளர்களுக்கு மாறினார்.[3] சேர்ந்து கல்வியாளராக மாறினார் [3] மலையாளத் துறை பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியிலிருந்து ஓய்வு பெறும்வரை அங்கிருந்து பணியாற்றினார்.[4]
மதுசூதனன் நாயர் எஸ். மாலதி தேவி என்பவரை மணந்தார். தம்பதியருக்கு இரேஷ்மி, இரம்யா என்ற இரண்டு மகள்களும், விஷ்ணு என்ற மகனும் உள்ளனர்.[2] இந்த குடும்பம் திருவனந்தபுரத்தின் தேவஸ்வம் போர்டு சந்திப்பில் வசிக்கிறது.[5]
ஆளுமை
மதுசூதனன் நாயர் பள்ளியில் இருந்தபோதே கவிதைகள் எழுதத் தொடங்கினார். இவருடைய முதல் கவிதைகள் 1980களில் வெளியிடப்பட்டன. இவரது முதல் கவிதைத் தொகுப்பு, நாறாணத்து பிராந்தன் 1992 இல் வெளியிடப்பட்டது.[6] இந்த புத்தகம் மலையாள இலக்கியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் பிரபலமான கவிதைத் தொகுப்பாகும். 40க்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது மிகவும் அச்சிடப்பட்ட இரண்டாவது புத்தகமான சங்கம்புழா கிருஷ்ணப் பிள்ளையின் இரமணனை விஞ்சியது. இது 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி 18 பதிப்புகளைக் கொண்டிருந்தது.[7] இவர் மலையாளம் தவிர தமிழ், சமஸ்கிருதம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளை அறிந்தவராக இருந்தார். கவிதைகளைத் தவிர, எலியோட்டம் ரிச்சர்ட்சும், ஒரு விமர்சன ஆய்வு, அறிவியல் நிகண்டு, அகராதி, கேரள நாட்டுப்புறக் கதைகளைப் பற்றிய நாடோடி விக்னனம் உள்ளிட்ட ஐந்து புனைகதை அல்லாத புத்தகங்களையும் இவர் வெளியிட்டுள்ளார். மூன்று மலையாள படங்களுக்கும் இவர் பாடல் எழுதியுள்ளார். சந்தானகோபாலம், குலாம், அர்த்தநாரி இவரது கவிதைகள் தெய்வத்தின்றெ விக்ருதிகள், புண்யம், புனர்ஜனி, வீட்டிலேக்குள்ள வழி போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.[8] தரங்கிணி, மனோரமா இசைப் பாடல்களையும் எழுதினார்.
விருதுகளும் கௌரவங்களும்
மதுசூதனன் நாயர் 1986 ஆம் ஆண்டில் கவிதைக்கான குஞ்சு பிள்ளை விருதையும், 1990 இல் கே.பாலகிருஷ்ணன் விருதையும் பெற்றுள்ளார்.[2] கேரள சாகித்ய அகாதமி 1993 ஆம் ஆண்டில் கவிதைக்கான ஆண்டு விருதுக்கு இவரது முதல் தொகுப்பான நாறாணத்து பிராந்தனைத் தேர்ந்தெடுத்தது.[9] ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, இவருக்கு 2003 ஆசான் சுமாரக கவிதா புரஸ்காரம் வழங்கப்பட்டது.[10] அதே ஆண்டில் இவருக்கு மேலும் ஆர்.ஜி.மங்களம் விருது, சௌபர்னிகாதீரம் பிரதிபாபுரஸ்காரம் என்ற இரண்டு விருதுகள் கிடைத்தன.[4] இவர் 2015 இல் ஜன்மாஷ்டமி புரஸ்காரம் பெற்றார். ஒரு வருடம் கழித்து, இவருக்கு 2016 இல் பத்மபிரப இலக்கிய விருதும் வழங்கப்பட்டது.[3][11] சாகித்ய அகாதடமி அச்சன் பிறந்ந வீடு என்ற இவரது படைப்பை, 2019 ஆம் ஆண்டில் இவர்களின் வருடாந்திர விருதுக்குத் தேர்ந்தெடுத்தது.
குறிப்புகள்
- ↑ "വി.മധുസൂദനന് നായര്" (in en). 2019-01-23 இம் மூலத்தில் இருந்து 2019-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190123223139/https://www.mathrubhumi.com/books/special/mbifl2019/speakers/v-madhusoodanan-nair-mbifl2019-1.3483766.
- ↑ 2.0 2.1 2.2 "Madhusudanan Nair biography" (in en). 2019-01-23. https://www.last.fm/music/Madhusudanan+Nair/+wiki.
- ↑ 3.0 3.1 3.2 "V Madhusoodanan Nair wins Padmaprabha Award - Times of India". November 12, 2016. https://timesofindia.indiatimes.com/city/kozhikode/V-Madhusoodanan-Nair-wins-Padmaprabha-Award/articleshow/55382312.cms.
- ↑ 4.0 4.1 "V. Madhusoodhanan Nair - V. Madhusoodhanan Nair Biography - Poem Hunter". https://www.poemhunter.com/v-madhusoodhanan-nair/biography/.
- ↑ M, Athira (2015-11-27). "Landscapes of the mind" (in en-IN). https://www.thehindu.com/features/metroplus/society/writer-v-madhusoodanan-nair-on-his-workspace/article7923425.ece.
- ↑ "V Madhusoodanan Nair- Speaker in Kerala literature Festival KLF-2019". 2019-01-23 இம் மூலத்தில் இருந்து 2019-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190123223620/http://keralaliteraturefestival.com/speakers_more.aspx?id=NDUw.
- ↑ Payyeri, Peethambaran (2016-04-10). "A mad man’s eternal truths" (in en). https://www.deccanchronicle.com/nation/in-other-news/100416/a-mad-man-s-eternal-truths.html.
- ↑ "List of Malayalam Songs written by V Madhusoodanan Nair". 2019-03-29. https://www.malayalachalachithram.com/listsongs.php?l=1614.
- ↑ "Kerala Sahitya Akademi Award for Poetry". 2019-01-23 இம் மூலத்தில் இருந்து 2018-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180626195512/http://www.keralasahityaakademi.org/sp/Writers/ksa/Awards/poetry.htm.
- ↑ "ASAN MEMORIAL ASSOCIATION". 2019-01-23. http://asaneducation.com/asan_association/awards.html#list.
- ↑ "V Madhusoodanan Nair presented Padmaprabha Award" (in en). https://english.mathrubhumi.com/news/kerala/v-madhusoodanan-nair-presented-padmaprabha-award-m-mukundan-kalpetta-1.1649511.
வெளி இணைப்புகள்
- "V Madhusoodanan Nair" (in en). 2019-01-23 இம் மூலத்தில் இருந்து 2019-01-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190123223846/https://www.mathrubhumi.com/books/features/v-madhusoodanan-nair-malayalam-news-1.1496064/v-madhusoodanan-nair-1.1496074.
- AK RHYTHMS (2017-05-29). "Agasthya Hrudayam Madhusoodanan Nair Kavitha". https://www.youtube.com/watch?v=fDki4g-MR9E.
- "ആചാരങ്ങൾക്ക് അതിന്റെ വഴി, ജാതിഭേദം ആപത്കരം: വി.മധുസൂദനൻ നായർ" (in en). https://www.manoramanews.com/weekly-programs/nere-chovve/2019/02/17/vmadhusoodanan-nair-on-sabarimala-and-election.html.